கேரளாவை அச்சுருத்தும் நிபா வைரஸ்- 12 வயது சிறுவன் பலி
Death
Child
Nipah virus
Keral
By Thahir
கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பால் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கொரோனா மூன்றாம் அலை பரவல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் கேரளாவில் கொரோனா பாதிப்புகள் வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால் கேரளாவில் முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது.

இந்நிலையில் கேரளாவில் மீண்டும் நிபா வைரஸ் பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவின் கோழிக்கோடு பகுதியை சேர்ந்த 12 வயது சிறுவன் நிபா வைரஸுக்கு பலியாகியுள்ளான். கடந்த சில வருடங்கள் முன்னதாக கேரளாவில் பரவிய நிபா வைரஸ் பல உயிர்களை பலி கொண்டது குறிப்பிடத்தக்கது.