அருவா சண்டை ஆதிராஜன் இயக்கும் அடுத்த திரைப்படம் - இளையராஜா இசையில் தயாரிக்கப்படும் வெற்றி கதை!! ரசிகர்கள் ஆர்வம்!
தமிழ், தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம், கன்னடம், மலையாளம், மராட்டி என பன்மொழி படங்களுக்கு இசையமைத்து, உலகத் திரைப்பட வரலாற்றிலேயே மிக அதிக படங்களுக்கு இசையமைத்தவர் என்ற சாதனையை தக்க வைத்திருக்கும் பெருமை இசைஞானி இளையராஜாவையே சேரும்.
இவரது இசையில் உருவாகும் திரைப்படம் தான் “நினைவெல்லாம் நீயடா”. லேகா தியேட்டர்ஸ் பட நிறுவனம் சார்பில் ராயல் பாபு தயாரிக்கும் இந்த படத்தை, சிலந்தி, ரணதந்த்ரா, அருவா சண்ட ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் ஆதிராஜன் இந்த திரைப்படத்தையும் இயக்குகிறார்.
இந்த படத்தின் கதாநாயகனாக பிரஜன் நடிக்கிறார். கதாநாயகியாக முன்னணி நடிகை நடிக்கவுள்ளார். மேலும் இத்திரைப்படத்தில் புதுமுக கதாநாயகியாக சினாமிகா அறிமுகமாகிறார்.
முக்கிய வேடத்தில் பிக்பாஸ் புகழ் கேப்ரில்லாவும் நடிக்கிறார். மேலும் காமெடிக்கும் பஞ்சம் இல்லாமல் மனோபாலா, காளி வெங்கட், மயில்சாமி, மதுமிதா, செல்முருகன் உள்ளிட்டோர் நடிக்கவுள்ளனர். சண்டைக்காட்சிகளை தளபதி தினேஷ் அமைக்கிறார்.
இத்திரைபப்டத்தின் பாடல்களை பழநிபாரதி சினேகன் ஆகியோர் எழுதுகின்றனர். நடன கட்சிகளை பிருந்தா, தீனா அமைக்கின்றனர். இந்த திரைப்படத்தின் தொடக்க விழா கோடம்பாக்கத்தில் உள்ள இசைஞானி இளையராஜாவின் புதிய ஸ்டூடியோவில் கடந்த 3 நாட்களுக்கு பூஜையுடன் நடைபெற்றது.
இது குறித்து இயக்குனர் ஆதிராஜன் பேசுகையில், “இந்திய திரையிசையின் அடையாளமாகத் திகழும் இசைஞானி இளையராஜாவின் இசையில் ஒரு படம் இயக்க வேண்டும் என்பது என் நீண்ட நாள் கனவு என்றும் இந்த வாய்ப்பு என் தவத்திற்கு கிடைத்த வரம் எனவும் கூறியுள்ளார்.
மேலும், ஒவ்வொரு ஆணும் ஒவ்வொரு பெண்ணும் மண்ணுக்குள் போகும் வரை மறக்க முடியாதது… முதல் காதல். அதுவும் மீசை அரும்பும் முன்பே ஆசை அரும்பும்
பள்ளிக்கூட காதல் நினைக்கும் போதெல்லாம் சிலிர்க்கவைக்கும் என்றும் முதல் காதலை மறக்க முடியாமல் தவிக்கும் காதலர்களை பற்றிய இளமை துள்ளும் கதை இது எனவும்
தெரிவித்துள்ளார்.

ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை ஆதாரமாக உலகை உலுக்கிய No fire zone தமிழில் (கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும்) IBC Tamil
