கடைசி நேரத்தில் தள்ளிப்போன நிமிஷா பிரியா தூக்கு தண்டனை - என்ன நடந்தது?
நிமிஷா பிரியாவின் மரண தண்டனை கடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நிமிஷா பிரியா
கேரளாவைச் சேர்ந்த நர்ஸ் நிமிஷா பிரியா ஏமன் அந்நாட்டைச் சேர்ந்த தலாலு அப்துல் மஹ்தி என்பவரைக் கொலை செய்த வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருக்கிறார்.
அவரது தண்டனையைத் தடுப்பதற்கான தொடர் முயற்சிகளை இந்திய அரசு மேற்கொண்டு வருகிறது. ஜூலை 16ஆம் தேதி நிமிஷா பிரியாவின் மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளதாக சனாவில் உள்ள ஏமன் சிறைத்துறை அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டது.
இந்த விவகாரத்தில் இந்திய அரசு தொடர்ந்து தூதரக ரீதியிலான முயற்சிகளை மேற்கொண்டது. இந்நிலையில், இந்தியாவின் கிராண்ட் முஃப்தி என அறியப்படும் ஷேக் காந்தபுரம் ஏ.பி. அபூபக்கர் முஸ்லியார் இந்த விவகாரத்தில் தலையிட்டார்.
மரண தண்டனை ஒத்திவைப்பு
அவர் ஏமனில் உள்ள மத மற்றும் அரசியல் தலைவர்களுடன் தொடர்பு கொண்டு பேசினார். இதன் காரணமாக முதல் முறையாக மஹ்தியின் சகோதரர் பேச்சுவார்த்தைக்கு சம்மதித்தார். நிமிஷாவின் வழக்கறிஞர் சுபாஷ் சந்திரன் இது குறித்துக் கூறுகையில்,
"முதல் முறையாக பாதிக்கப்பட்டவரின் சகோதரர் பேச்சுவார்த்தைக்கு வந்தார். நாங்கள் இரவு முழுவதும் பேசினோம். காலைக்குள், மரண தண்டனை ஒத்திவைக்கப்பட்டது. இது எங்களுக்கு கிடைத்த பெரிய நிவாரணம்
. குடும்பத்தினரை சமாதானப்படுத்த எங்களுக்கு சிறிது காலம் கிடைத்துள்ளது" என தெரிவித்துள்ளார். இதனையடுத்து மஹ்தியின் குடும்பத்தினர் இரத்தப் பணத்தை ஏற்றுக்கொண்டு, நிமிஷாவை மன்னித்தால் மட்டுமே நிரந்தர விடுதலை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.