முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில் மோசடி வழக்கு.. புது ரூட் எடுக்கும் போலீசார்!
முன்னாள் அதிமுக அமைச்சர் நிலோபர் கபில் வேலை வாங்கி தருவதாக ₹6.62 கோடி மோசடி செய்த விவகாரத்தில் போலீசார் விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பேட்டையை சேர்ந்தவர் பிரகாசம் (47). அதிமுக பிரமுகர்.
இவர் சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் ஆன்லைன் மூலம் புகார் மனுவை அனுப்பி வைத்தார்.அதில்:
முன்னாள் அதிமுக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபிலுக்கு உதவியாளராக செயல்பட்டதாகவும் தேர்தல் செலவுக்காக ரூ.80 லட்சம் பலரிடமும் வாங்கி கொடுத்தாக தெரிவித்துள்ளார்.
மேலும், அரசு துறைகளில் வேலை வாங்கி தருவதாக நிலோபர் கபில் சொன்னதன்பேரில் சிலர் காசோலைகளாக என்னிடம் பணம் கொடுத்தனர். அந்த பணம் கபிலிடம் சேர்க்கப்பட்டது.
ஆனால் அவர் சொன்னபடி வேலை வாங்கி தரவில்லை ஆகவே பணம் கொடுத்தவர்கள் தன்னிடம் பணத்தை திருப்பி கேட்டு வருவதாக் நிலோபர் மீது நடவடிக்கை எடுத்து ரூ.6.62 கோடியை பெற்றுத்தர வேண்டும்’’ என குறிப்பிட்டுள்ளார்.
இந்த மோசடி விவகாரத்தில் கோவையை சேர்ந்த அதிமுக பிரமுகர் ஒருவரின் பெயரும் இடம்பெற்றுள்ளது.
அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி அமைச்சரின் வேலைவாய்ப்பு மோசடி மற்றும் பல்வேறு மோசடி விவகாரங்கள் குறித்து தகவல்களை சேகரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.