நீலகிரி மாவட்டத்தில் அச்சுறுத்திடும் புலி - வனத்துறைக்கு மக்கள் கோரிக்கை !
நீலகிரி மாவட்டம் கூடலூர் தேவன் எஸ்டேட் பகுதியில் சுற்றித்திரியும் புலியை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை.
புலி நடமாட்டம்
நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த தேவன் எஸ்டேட் பகுதியில் புலி ஒன்று நடமாடி வருகிறது. கடந்த ஒன்றரை மாதத்தில் நான்கு கால்நடைகளைத் தாக்கி புலி கொன்றுள்ளது. மக்கள் புளியை நேரில் கண்டதால் பெரும் அச்சத்தில் உள்ளனர்.
இதனால் மக்கள் வேலைக்கு செல்வதற்கும், இரவில் வெளியில் வருவதற்கும், கால்நடைகளை மேய்ப்பதற்கும் செல்லமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
புலியை பிடிக்க கோரிக்கை
இந்நிலையில் பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் அந்த புலியை பிடிக்க வேண்டும் என தமிழக அரசுக்கும், வனத்துறைக்கும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.