நள்ளிரவில் உலா வரும் சிறுத்தையால் பொதுமக்கள் அச்சம்

Nilgiris Pandalur cheetah walking
By Anupriyamkumaresan Nov 23, 2021 08:04 AM GMT
Report

நீலகிரி மாவட்டம் பந்தலூர் குடியிருப்பு பகுதிக்குள் நள்ளிரவில் சிறுத்தை நடமாட்டம் காணப்படுவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் வனப்பகுதியை ஒட்டியே உள்ளதால் அவ்வப்போது அப்பகுதிகளில் வனவிலங்குகள் உலா வருவது வழக்கம்.

அந்த வகையில் பந்தலூர் இந்திரா நகரில் நேற்று நள்ளிரவு சிறுத்தை ஒன்று நடமாடும் காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

இதனை கண்ட மக்கள் பொது வெளியில் நடமாட அச்சத்தில் உறைந்துள்ளனர். மேலும் சிறுத்தையை பிடிக்க கோரி வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.