20 நாளாக போக்குகாட்டிய T23 புலி: மயக்க ஊசி செலுத்தி பிடித்த வனத்துறை!

t23tiger nilgirisdistrict caughtt23
By Irumporai Oct 14, 2021 06:34 PM GMT
Report

 மனிதர்களை வேட்டையாடி வந்த T-23 ஆட்கொல்லி புலிக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 முதுமலை புலிகள் காப்பத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் உள்ள புலிகளில் ஒன்றுதான் 13 வயதுடையை இந்த T23 புலி.

இந்தப் புலி மசினக்குடியில் கெளரி என்ற பெண்ணை கடந்த ஆண்டு அடித்து கொன்றது. பின்னர் அப்பகுதியிலிருந்து கூடலூர் அருகே உள்ள தேவன் எஸ்டேட் பகுதிக்கு நகர்ந்த புலி கடந்த சில மாதங்களில் குஞ்சு கிருஷ்ணன், சந்திரன் ஆகிய இருவரையும் அடித்து கொன்றது

. இதை தவிர அப்பகுதியில் 30-கும் மேற்பட்ட கால்நடைகளையும் கொன்றது. இதற்கிடையில் ஆட்கொலி புலி மசினகுடி அருகே உள்ள சிங்காரா வனப்பகுதியில் கால்நடை மேய்துக்கொண்டிருந்த மங்கள பசுவன் என்பவரை கடந்த சில வாரங்களுக்கு முன்பு அடித்து கொன்றது.

ஆகவே இந்த புலியை சுட்டுக் கொல்ல வேண்டும் என்று பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனையடுத்து புலியை சுட்டுக்கொல்ல வனத்துறை முடிவெடுத்தது.

புலியை கொல்ல  எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தநிலையில் புலியை சுட்டுக்கொல்ல உயர் நீதிமன்றம் தடை விதித்தது.

ஆகவே T23 - புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறையினர் தொடர்ந்து போரடி வந்தனர்ம்  புலியின் நடமாட்டம் குறித்து டோரோன் கேமரா மூலம் புலியின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டது.

.இந்த நிலையில் தொடர்ந்து 21 நாளாக நடந்த தேடுதல் வேட்டையில் மசினகுடி அருகே தெப்பகாடு சாலையில் புலி தென்பட்டது. அதனை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்துள்ளனர்.