நீலகிரி மாவட்ட ஆட்சியர் யார் தெரியுமா? முழு விவரம் இதோ!

Nilgiris
By Karthikraja Jan 29, 2025 03:30 PM GMT
Report

நீலகிரி மாவட்டம்

நீலகிரி மாவட்டம் தமிழ்நாட்டின் முக்கிய சுற்றுலாத்தலங்களில் ஒன்றாகும். நீலகிரியில் அமைந்துள்ள ஊட்டி, தொட்டபெட்டா போன்ற மலை பிரதேசங்களின் அழகை ரசிக்க பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருவது உண்டு. 

nilgiris district full details

1789 ஆம் ஆண்டு நீலகிரி பிரிட்டிஷ் அரசிடம் கொடுக்கப்பட்டவுடன், அது கோயம்புத்தூர் மாவட்டத்தின் ஒரு பகுதியாக மாறியது. அப்போது கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியராக இருந்த ஜான் சுல்லிவன், நீலகிரியின் இயற்கை அழகில் ஈர்க்கப்பட்டு தனது குடியிருப்புகளை அங்கு மாற்றினார். அதன் பிறகு 1882 ஆம் ஆண்டு நீலகிரி தனி மாவட்டமாக உருவாக்கப்பட்டது. நீலகிரி மாவட்டத்தின் முதல் ஆட்சியராக ரிச்சர்ட் வெலெஸ்லி பார்லோ 01.08.1868 அன்று பதவியேற்றார்.

நீலகிரியை இந்தியாவின் முதல் உயிர்க்கோள் காப்பகமாக ஐக்கிய நாடுகள் சபையின் யுனெஸ்கோ அறிவித்தது. நீலகிரியின் குன்னூர் அருகே இந்திய ராணுவத்தின் வெல்லிங்டன் கன்டோன்மென்ட், 80 ஏக்கர் பரப்பளவில் தமிழ்நாடு ஆளுநரின் கோடைகால இல்லமான ஊட்டி ராஜ் பவன், முதுமலை புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. 

நீலகிரியில் உதகமண்டலம், கூடலூர் (தனி), குன்னூர் என 3 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. நீலகிரி மாவட்டமானது, கோயம்புத்தூர், ஈரோடு மாவட்டங்களுடனும், கேரளா, கர்நாடக மாநிலங்களுடனும் தனது எல்லையை பகிர்ந்துள்ளது. 

லட்சுமி பவ்யா தண்ணீரு ஐ.ஏ.எஸ்

நீலகிரி மாவட்டத்தின் 116 வது ஆட்சியராக கடந்த 17.07.2024 அன்று பதிவியேற்ற லட்சுமி பவ்யா தண்ணீரு ஐ.ஏ.எஸ் தற்போது வரை இந்த பொறுப்பில் செயல்பட்டு வருகிறார். 

Lakshmi Bhavya Tanneeru I.A.S biography

மேற்கு வங்க மாநிலந்தை சேர்ந்த லட்சுமி பவ்யா தண்ணீரு ஐ.ஏ.எஸ் 2015 பேட்ச் ஐஏஎஸ் அதிகாரி ஆவார். பொறியியல் மற்றும் முதுகலை பொது மேலாண்மை படித்துள்ள இவர், முன்னதாக மேற்கு வங்க மாநில கேடரில் பணியாற்றி வந்தார்.

தமிழ்நாடு கேடர் ஐ.ஏ.எஸ் அதிகாரியான ரீ ராஜ கோபால் சுங்கரா ஐஏஎஸ் ஐ திருமணம் செய்த பிறகு 2022 ஆம் தமிழ்நாடு கேடருக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். முன்னதாக நிதித்துறை துணை செயலாளர், ஈரோடு மாவட்ட வணிக வரி இணை ஆணையர் ஆகிட பல்வேறு பொறுப்பு வகித்துள்ளார்.

அருணா ஐ.ஏ.எஸ்

அக்ரி படிப்பை முடித்துள்ள அருணா ஐ.ஏ.எஸ், 2016 பேட்ச் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆவார். முன்னதாக அச்சு மற்றும் எழுது பொருள் துறை இயக்குநர், சென்னை மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்த இவர், 13.09.2023 முதல் 17.07.2024 வரை நீலகிரி மாவட்ட ஆட்சியராக பணியாற்றியுள்ளார்.

அம்ரித் ஐ.ஏ.எஸ்

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த அம்ரித் ஐ.ஏ.எஸ் 2013 பேட்ச் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆவார். முன்னதாக புதுக்கோட்டை மாவட்ட துணை ஆட்சியர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர், நில நிர்வாக இணை ஆணையர், மதுவிலக்கு, கலால் துறை செயலாளர் என பல்வேறு பொறுப்பு வகித்துள்ளார். 

S.P. amritha IAS biography

நீலகிரி மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்த ஜெ. இன்னசென்ட் திவ்யா ஐ.ஏ.எஸ் பணியிட மாற்றம் செய்யப்பட்டதையடுத்து,25.11.2021 முதல் 12.09.2023 வரை அம்ரித் ஐ.ஏ.எஸ் நீலகிரி மாவட்ட ஆட்சியராக பணியாற்றினார். 

இன்னசென்ட் திவ்யா ஐ.ஏ.எஸ்

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த இன்னசென்ட் திவ்யா ஐ.ஏ.எஸ் 2009 பேட்ச் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆவார். முன்னதாக முதல்வர் ஜெயலலிதாவின் தனி செயலராக பணியாற்றி வந்த இவர், 10.07.2017 முதல் 22.10.2021 வரை நீலகிரி மாவட்ட ஆட்சியராக பணியாற்றினார். 

innocent divya I.A.S biography

நீலகிரி மாவட்டத்தின் சுற்றுசூழலை பராமரிக்கவும், பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிக்கவும் மிகுந்த அக்கறை காட்டினார். நீலகிரி மாவட்டத்தில் யானை வழித்தடங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்ட ரிசார்ட்களை அப்புறப்படுத்துவதில் யாருக்கும் வளைந்து கொடுக்காமல் பணியாற்றினார்.

தமிழகத்தின் முதல் பெண் தலைமை தேர்தல் அதிகாரியாக பணியாற்றிய அர்ச்சனா பட்நாயக், முன்னாள் தமிழ்நாடு தலைமை செயலர் ஸ்ரீபதி ஆகியோர் நீலகிரி மாவட்ட ஆட்சியராக பணியாற்றியுள்ளனர்.