தமிழகத்தில் 2 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!

Tamil nadu TN Weather Weather
By Jiyath Jul 20, 2024 10:00 AM GMT
Report

தமிழகத்தில் 2 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

கனமழை 

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, 20.07.2024 (இன்று) தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தமிழகத்தில் 2 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்! | Nilgiris Coimbatore Likely To Receive Heavy Rain

நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. 21.07.2024 முதல் 26.07.2024 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்" என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

8 கி.மீ ஓடி மற்றோரு கொலையை தடுத்த மோப்ப நாய் - உயிர் தப்பிய பெண்!

8 கி.மீ ஓடி மற்றோரு கொலையை தடுத்த மோப்ப நாய் - உயிர் தப்பிய பெண்!

வெப்பநிலை 

மேலும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் 2 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்! | Nilgiris Coimbatore Likely To Receive Heavy Rain

அதிகபட்ச வெப்பநிலை 34 -35 டிகிரி செல்சியசை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 - 28 டிகிரி செல்சியசை ஒட்டியும் இருக்கக்கூடும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.