நீலகிரி சட்டமன்ற தொகுதிக்குற்பட்ட 3 தொகுதிகளின் வாக்கு எண்ணும் மையத்திற்கு 775 காவலர்கள் நியமனம்
நீலகிரி மாவட்ட தொகுதியின் வாக்கு எண்ணும் மையத்திற்கு 775 காவலர்கள் பாதுகாப்பு பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நீலகிரி சட்டமன்ற தொகுதிற்குட்பட்ட உதகை, குன்னூர் மற்றும் கூடலூர் (தனி) ஆகிய 3 தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை உதகை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெறுவதையொட்டி, வாக்கு எண்ணிக்கை மையத்தில் 775 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் நாளை முழு ஊரடங்கை முன்னிட்டு வெற்றி ஊர்வலங்கள், கொண்டாட்டங்கள் மற்றும் பட்டாசு வெடிக்க தடை. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் அளித்த போட்டியானது, தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் நாளை அறிவிக்கப்படவுள்ளன.
இதன் ஒரு பகுதியாக நீலகிரி சட்டமன்றத்திற்குட்பட்ட உதகை, குன்னூர் மற்றும் கூடலூர் (தனி) ஆகிய மூன்று தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை உதகை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெறுகிறது. இதற்காக 775 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வரும் அனைத்து பணியாளர்கள் மற்றும் தேர்தல் முகவர்கள் அனைவரும் RTPCR பரிசோதனை செய்து, நெகடிவ் சான்றிதழ் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என தெரிவித்தார்.
அதுமட்டுமின்றி நாளை முழு ஊரடங்கை முன்னிட்டு வெற்றி ஊர்வலங்கள், கொண்டாட்டங்கள் மற்றும் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டிருப்பதால், பொது மக்கள் அனைவரும் பொது இடங்களில் முகாந்திரம் இல்லாமல் நடமாடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் தெரிவித்தார்.
மேலும் கடந்த 25 நாட்களில் முக கவசம் அணியாதவர்கள் மீது 13 ஆயிரத்து 400 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 20 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருப்பதாக காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் தெரிவித்தார்.