நடிகை நிக்கி கல்ராணி கர்ப்பம்? தீயாய் பரவும் தகவல்... - குஷியில் ரசிகர்கள்...!

Nikki Galrani Pregnancy
By Nandhini Nov 17, 2022 07:06 AM GMT
Report

நடிகை நிக்கி கல்ராணி கர்ப்பமாக இருப்பதாக தற்போது தகவல் சமூகவலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.

நடிகை நிக்கி கல்ராணி

டார்லிங் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை நிக்கி கல்ராணி தொடர்ந்து யாகாவராயினும் நாகாக்க, கோ 2, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், கடவுள் இருக்கான் குமாரு, ஹரஹர மகாதேவகி, கலகலப்பு 2, பக்க, தேவ், கீ, ராஜவம்சம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானார்.

நடிகர் ஆதி

இதேபோல் ‘மிருகம்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகர் ஆதி தொடர்ந்து ஈரம், அய்யனார், ஆடு புலி, அரவாண், வல்லினம், கோச்சடையான், மரகத நாணயம், யூ டர்ன் ஆகிய படங்களில் நடித்திருந்தார். இவர்கள் இருவரும் இணைந்து ‘யாகாவராயினும் நாகாக்க’, ‘மரகதநாணயம்’ ஆகிய படங்களில் ஜோடியாக நடித்திருந்தனர்.

இந்த ஜோடி ரீல் சினிமாவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் ரியல் லைஃப்பிலும் ஜோடியாகியுள்ளனர்.

திருமணம்

ஒன்றாக படங்களில் நடித்தபோது ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியது. இதன் தொடர்ச்சியாக ஆதி - நிக்கி கல்ராணி இடையேயான நிச்சயதார்த்தம் கடந்த மார்ச் 24-ம் தேதி சென்னையில் ஒரு ஒரு ஹோட்டலில் நடைபெற்றது.

இவர்களது திருமணம் கடந்த மே மாதம் 18ம் தேதி சென்னையில் எளிமையாக நடைப்பெற்றது. சினிமா பிரபலங்கள், முக்கிய பிரமுகர்கள் இத்திருமணத்திற்கு வருகை தந்து மணமக்களை வாழ்த்தினர். 

திருமணத்திற்குப் பிறகு, தம்பதிகள் தேனிலவுக்கு பாரிஸ் சென்றனர். சமூக வலைதளங்களில் தங்களின் காதல் புகைப்படங்களையும் பகிர்ந்தனர்.

nikki-galrani-aathi-pregnancy

நடிகை நிக்கி கல்ராணி கர்ப்பம்?

இந்நிலையில், நடிகர் ஆதியின் மனைவி நிக்கி கல்ராணி கர்ப்பமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால், இது குறித்து அவர்களது தரப்பிலிருந்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

நிக்கி கல்ராணி சமீபத்தில் எந்த படத்திலும் ஒப்பந்தமாகாமல் இருப்பதால் இத்தகவல் உண்மையாக இருக்க வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.