துப்பாக்கி முனையில் பிரபல நடிகை வீட்டில் கொள்ளை
Actor
House
Theft
Nikita Rawal
By Thahir
பிரபல இந்தி நடிகை நிகிதா ராவல். இவர் டெல்லி சாஸ்திரி நகரில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி இருந்தார்.
படப்பிடிப்பு முடிந்து நிகிதா ராவல் வீடு திரும்பியபோது காரில் வந்த முகமூடி கொள்ளையர்கள் அவரை வழிமறித்தனர்.
துப்பாக்கியை காட்டி மிரட்டி நிகிதாவிடம் இருந்து ரூ.7 லட்சம் மற்றும் நகைகளை பறித்து சென்றனர். பணத்தை இழந்த நிகிதா ராவல் பயந்து வீட்டுக்குள் ஓடிச்சென்று பீரோவில் ஒளிந்துகொண்டார்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நிகிதா ராவல் கூறும்போது, “இந்த அதிர்ச்சியில் இருந்து என்னால் வெளியே வரமுடியவில்லை. நான் உயிரோடு இருப்பதையும் நம்ப முடியவில்லை'' என்றார்.