அன்ஃபாலோ செய்து கணவரின் ஃபோட்டோக்களை நீக்கிய விஜய் சேதுபதி பட நாயகி!
நடிகை நிஹாரிகா தனது கணவருடனான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் நீக்கியுள்ளார்.
நிஹாரிகா
சிரஞ்சீவியின் சகோதரர் நாகபாபுவின் மகள் தான் நிஹாரிகா. தமிழில் விஜய் சேதுபதி நடித்திருந்த ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் படத்தில், கெளதம் கார்த்திக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
தொடர்ந்து, தனது காதலரான சைதன்யா ஜொன்னலக்டாவை டிசம்பர் 2020-ல் உதய்பூரில் திருமணம் செய்தார். ஹைதராபாத்தில் பிறந்து வளர்ந்த இவர், குண்டூர் ஐ.ஜி எம்.பிரபாகர ராவின் மகன். பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் பிஸினெஸ் ஆலோசகராக பணிபுரிந்து வருகிறார்.
விவாகரத்து
இந்நிலையில், இவர்களது திருமண வாழ்க்கை சுமூகமாக இல்லை என்ற செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தது. அதன்படி, இன்ஸ்டகிராமில் ஒருவரையொருவர் அன் ஃபாலோ செய்தனர்.
தொடர்ந்து நிஹாரிகா கணவருடனான புகைப்படங்களை நீக்கியுள்ளார். இதனால் இவர்கள் விரைவில் விவாகரத்து செய்யக்கூடும் எனக் கூறப்படுகிறது.