விவகாரத்தாகி ஒரு வருஷம் கூட ஆகல...அடுத்த கல்யாணத்துக்கு ரெடி..பரபரக்கும் சிரஞ்சீவி குடும்பம்..!
நடிகர் சிரஞ்சீவியின் குடும்பத்தை சேர்ந்தவர் விவகாரத்தாகி இன்னும் ஒரு வருடகாலம் கூட ஆகாத நிலையில், இரண்டாவது திருமணத்திற்கு தயாராகி வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
நடிகர் சிரஞ்சீவி தம்பி மகள்
தெலுங்கு உலகின் மெகாஸ்டாராக இருந்து வருபவர் நடிகர் சிரஞ்சீவி. மெகாஹிட் படங்களை அடுத்தடுத்து கொடுத்து வரும் சிரஞ்சீவி, தற்போது வசிஷ்டா என்பவரின் இயக்கத்தில் 157-வது படத்தில் நடித்து வருகின்றார்.
தெலுங்கு திரையுலகத்தில் இவரின் குடும்பத்தை சேர்ந்த பலரும் முன்னணி நாயகர்களாக இருந்து வரும் நிலையில், இவரின் தம்பி மகளும் ஓரிரு படங்களில் நடித்துள்ளார். நிகாரிகா என்ற அவர் 2016-ஆம் ஆண்டு முதல் ஓரிரு படங்களில் நடித்துள்ளார். படங்களில் பெரிதாக நாயகியாக வெற்றி முடியாமல் இருந்து அவர், பிறகு தனது சொந்த படத்தயாரிப்பு நிறுவனத்தை துவங்கி சில வெப் தொடர்களை தயரைத்துள்ளார் தயாரித்துள்ளார்.
மீண்டும் திருமணம்
இவரின் திருமணம் கடந்த 2020-ஆம் ஆண்டு ஜெய்ப்பூர் மாளிகையில் நடைபெற்றது. சைதன்யா ஜோனலகட்டா என்பவரை பிரமாண்டமாக திருமண செய்துகொண்டார். ஆனால் திருமணமான சில ஆண்டுகளிலேயே இவர்கள் இருவருக்கு இடையிலும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட இந்த ஆண்டு ஜூலை மாதம்இருவரும் விவகாரத்து செய்து பிரிந்தனர்.
விவகாரத்தாகி ஒரு வருடம் கூட ஆகாத நிலையில், சைதன்யா ஜோனலகட்டாவிற்கு அவரது குடும்பத்தினர் மீண்டும் திருமண செய்து வைக்க முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இது சிரஞ்சீவி குடும்பத்தினருக்கு இடையே மட்டுமின்றி, தெலுங்கு திரையுலகிலும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.