பயங்கரவாத அச்சுறுத்தலால் மூடப்படும் பள்ளிக்கூடங்கள்
நைஜீரியாவில் பயங்கரவாத அச்சுறுத்தலால் பள்ளிக்கூடங்கள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் கடும் ஆதிக்கம் செலுத்தி வரும் போகோ ஹரம் பயங்கரவாதிகள் அவ்வப்போது பள்ளி மாணவர்களை கடத்தி சென்று அவர்களை தற்கொலைப்படை பயங்கரவாதிகளாக மாற்றுவது வழக்கம்.
அதேபோல் நைஜீரியாவில் ஆதிக்கம் செலுத்தும் பிற ஆயுதக்குழுக்கள் பள்ளி மாணவர்களை கடத்தி பிணைய கைதிகளாக வைத்துக் கொண்டு தங்களுக்கு தேவையான காரியத்தை சாதித்துக் கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளன.
நைஜீரியாவின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள கெப்பி மாகாணத்தில் பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாக பாதுகாப்பு இல்லாத பள்ளிக்கூடங்களை மூட மாகாண அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி அந்த மாகாணத்தில் தற்போது 7 பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டுள்ளன.