கேரளத்தில் ஆகஸ்ட் 30 முதல் இரவு நேரப் பொதுமுடக்கம் அறிவிப்பு!

lockdown kerala
By Irumporai Aug 28, 2021 01:45 PM GMT
Report

கேரளாவில் கொரோனா காரணமாக வரும் திங்கள் முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது. கேரளாவில் அதிகரித்துவரும் கொரோனா பாதிப்பு காரணமாக வரும் திங்கள் முதல் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படும் என கேரளா முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

கேரளாவில் தினசரி கொரோனா பாதிப்பு 30 ஆயிரத்திற்கும் மேல் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் இரவு ஊரடங்கை அம்மாநில அரசு அறிவித்துள்ளது. கேரள மாநிலத்தில் இன்று மேலும் 31,265 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் மேலும் 153 பேர் உயிரிழந்த நிலையில் 2.4 லட்சம் பேர் கொரோனா சிகிச்சையில் உள்ளனர்.

இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை அமலில் இருக்கும் இந்தப் பொதுமுடக்க நேரத்தில் மக்கள் வெளியில் நடமாட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கேரளத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 31,265 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது