ஊரடங்கை அறிவித்தது கர்நாடகா அரசு - நோய்த தடுப்பு பணிகள் தீவிரம்

karnataka nightlockdown இரவு நேர ஊரடங்கு
By Petchi Avudaiappan Jan 04, 2022 08:48 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in இந்தியா
Report

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கர்நாடகா மாநிலத்தில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 

கர்நாடக மாநிலத்தில் அதிகரித்து வரும் வைரஸ் பரவல் காரணமாக கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் நேற்று அவசர ஆலோசனை கூட்டம் பெங்களூருவில் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் முக்கிய அமைச்சர்கள், அரசு நியமித்த வல்லுநர் குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். கூட்டத்தின் முடிவில் மாநிலம் முழுவதும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பெங்களூருவில் வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில் நகரில் 10-ம் மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளி கல்லூரிகள் இயங்கும். இதர வகுப்புகளுக்கு நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து வணிக வளாகங்களில் ( ஹோட்டல், தியேட்டர், பப், என அனைத்து இடங்களிலும்) 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி என பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 

மஹாராஷ்டிரா, கேரளா, கோவா மாநிலங்களில் இருந்து வருபவர்கள் கண்டிப்பாக வைரஸ் பரிசோதனை செய்திருக்க வேண்டும். மேலும் மாநிலம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு வரும் 21 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் தெரிவித்துள்ளார்.