தேவைபட்டால் இரவு ஊரடங்கு வரலாம்: எச்சரிக்கும் தமிழக அரசு
தமிழகத்தில் தற்போது நடைமுறையில் உள்ள பலந்தரவில்லை என்றால், இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் 20 வகையான புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு நேற்றுப் பிறப்பித்தது.
அதன்படி, உணவகங்கள், கடைகளை இரவு 11 மணிக்குள் மூட வேண்டும், வழிபாட்டுத் தலங்களில் இரவு 8 மணி வரை மட்டுமே தரிசனத்துக்கு அனுமதி போன்ற தமிழக அரசு பிறப்பித்த பல்வேறு கட்டுப்பாடுகள் அனைத்தும் சனிக்கிழமை முதல் நடைமுறைக்கு வரவுள்ளன.

இந்த நிலையில், நாளை முதல் விதிக்கப்பட்டிருக்கும் புதிய கட்டுப்பாடுகளை பொதுமக்கள் கவனத்துடன் கடைப்பிடிக்காவிட்டால், கொரோனாவை தடுக்க தற்போது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைள் பலனளிக்காவிட்டால் பொது மக்கள் நலன் கருதி தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.