சக வீரரின் காதலை ஏற்ற பெண் ராணுவ வீராங்கனை அதிரடி கைது
நைஜீரியாவில் சக வீரரின் காதலை ஏற்ற பெண் ராணுவ வீராங்கனை கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நைஜீரிய நாட்டின் க்வாரா மாகாணம் இக்படா நகரில் ராணுவ பயிற்சி மையம் உள்ளது. இங்கு இளம் ராணுவ வீரர்/வீராங்கனைகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே இந்த பயிற்சி மையத்தில் ராணுவ பயிற்சியில் ஈடுபட்டு வந்த ஜேசன் என்பவரும், உயர் அதிகாரியான ஷகினாவும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ஜேசன் தனது காதலியான ஷகினாவிடம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் காதலை தெரிவித்துள்ளார். இவரும் மோதிரம் மாற்றிக்கொண்ட நிலையில் இதனை சக ராணுவ வீரர்கள் வீடியோவாக எடுத்து சமூகவலைதளத்தில் பதிவிட்டனர்.
இந்த வீடியோ உயர் அதிகாரிகளின் பார்வைக்கு சென்ற நிலையில் ராணுவ நடத்தை விதிகளை மீறி ராணுவ உடையில் இருந்தபோது காதலில் ஈடுபட்டதாக அந்த பெண் ராணுவ வீராங்கனை தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நைஜீரிய ராணுவ வீரர் வீராங்கனைகள் இடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.