வயிற்றுப்போக்கால் 329 பேர் உயிரிழப்பு - வெளியான அதிர்ச்சி தகவல்

Nigeria Diarrhea
By Thahir Sep 23, 2021 11:08 AM GMT
Report

நைஜீரியாவின் கனோ மாகாணத்தில் இந்தாண்டு மார்ச் முதல் தற்போது வரை வயிற்றுப் போக்கு போக்கால் 329 பேர் உயிரிழந்திருப்பதாக அந்நாட்டு சுகாதாரத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஆப்பிரிக்க நாடுகளில் அடிக்கடி நிகழும் வயிற்றுப் போக்கு நோயானது இந்தாண்டு மிகத்தீவிரமாக நைஜீரிய நாட்டை பாதித்திருக்கிறது.

வயிற்றுப்போக்கால் 329 பேர் உயிரிழப்பு - வெளியான அதிர்ச்சி தகவல் | Nigeria Diarrhea

தற்போது வரை 23 மாநிலங்களில் 67,903 பேருக்கு காலரா நோய் தாக்கியிருப்பதாகவும் அதில் 2,423 பேர் பலியாகியிருப்பதாகவும் மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.