இலவசமாக கொடுத்தும் பயனில்லை - மண்ணில் புதைத்து அழிக்கப்பட்ட 10 லட்சம் கொரோன தடுப்பூசிகள்

WHO nigeria covidvaccine
By Petchi Avudaiappan Dec 23, 2021 11:31 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in உலகம்
Report

நைஜீரியாவில் 10 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் மண்ணில் புதைத்து அழிக்கப்பட்டது. 

மீண்டும் ஆப்பிரிக்க நாடுகளில் கொரோனா பரவல் வெகுவாக அதிகரித்து வருகிறது. அந்நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசிகளை உலக சுகாதார அமைப்பு ஐரோப்பியா, இந்தியா, ரஷியா, சீனா, அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த மற்றும் வளர்ந்து வரும் நாடுகள் நன்கொடையாக வழங்கி வருகின்றன.

அங்கு தடுப்பூசி வழங்கப்பட்டும் போதும் போதிய மருத்துவ கட்டமைப்பு இல்லாததால் தடுப்பூசி செலுத்தும் பணிகளில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. வளர்ந்த, வளர்ந்து வரும் நாடுகளில் இருந்து நன்கொடையாக பெறப்பட்ட 10 லட்சம் அஸ்ட்ராஜெனகா நிறுவனத்தில் கொரோனா தடுப்பூசிகளை நைஜீரிய அரசு அழித்துள்ளது.

காலாவதியானதால் 10 லட்சத்து 66 ஆயிரத்து 214 கோரோனா தடுப்பூசி டோஸ்களை மண்ணில் புதைத்து அழித்துள்ளதாக நைஜீரிய அரசு தெரிவித்துள்ளது. பிற நாடுகள் நன்கொடையாக வழங்கிய 10 லட்சம் கொரோனா தடுப்பூசி டோஸ்கள் ஓரிரு வாரத்தில் காலாவதியாகும் சூழ்நிலையில் இருந்துள்ளது.

நைஜீரியாவில் போதிய மருத்துவ கட்டமைப்பு வசதி இல்லாததாலும், தடுப்பூசி தொடர்பாக எதிர்மறை தகவல்கள் பரவியதால் தடுப்பூசி மீது மக்கள் தயக்கம் காட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.