சிம்புவுடன் வீட்டிலேயே தங்கிய இளம் நடிகை? - வெளியான தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சி
இளம் நடிகை நிதி அகர்வால் நடிகர் சிம்புவின் வீட்டில் ஒன்றாக தங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ள ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் சிம்புவுக்கு சமீபத்தில் வெளிவந்த மாநாடு திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுக்கொடுத்தது. இதனைத் தொடர்ந்து பத்து தல, வெந்து தணியும் காடு ஆகிய படங்களில் அவர் பிசியாக நடித்து வருகிறார்.
38 வயதான நடிகர் சிம்புவுக்கு இன்னும் திருமணமாகவில்லை. ஆனால் நயன்தாரா, ஹன்சிகா ஆகியோருடன் காதல் வயப்பட்ட நிலையில் ஏனோ அவை பாதியில் முற்றுப் பெற்றன. இந்நிலையில் மீண்டும் ஒரு காதல் சர்ச்சையில் நடிகர் சிம்புவின் பெயர் அடிபட்டுள்ளது.
சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான ஈஸ்வரன் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்த நடிகை நிதி அகர்வாலுடன் சிம்பு காதலில் விழுந்துள்ளதாக கூறப்படுகிறது.
நிலையில் நிதி அகர்வால் சிம்புவின் வீட்டிலேயே தங்கியுள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் மும்பையில் மாநாடு படத்தின் ஸ்பெஷல் ஸ்க்ரீனிங்கிற்கு படக்குழு ஏற்பாடு செய்திருந்தது. இதில் வெங்கட் பிரபு, எஸ்ஜே சூர்யா, ஹுமா குரேஷி ஆகியோருடன் சிறப்பு விருந்தினராக நிதி அகர்வால் பங்கேற்றார் .
வளரும் இளம் நடிகையான நிதி அகர்வால் விரல் விட்டு எண்ணும் அளவிற்கு தான் படங்களில்தான் நடித்துள்ளார். ஆனால் அதற்குள்ளேயே ரசிகர்கள் கோவில் கட்டும் அளவுக்கு தனக்கான இடத்தை பிடித்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.