ஆணுறை குறித்து நிதி அகர்வால் பேசினால் சரி..? நான் பேசினால் தப்பா? - வெச்சு விளாசிய பயில்வான் ரங்கநாதன்
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் நடிகை நிதி அகர்வால்.
இவர் இந்தியில் கடந்த 2017ம் ஆண்டு வெளியான ‘முன்னா மைக்கல்’ படத்தின் மூலம் திரைத்துறையில் காலடி வைத்தார்.
அதன் பின்பு, தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். தமிழில் ‘ஈஸ்வரன்’ படத்தில் நடிகர் சிம்புவிற்கு ஜோடியாக நடித்திருந்தார் நிதி அகர்வால்.
இதனையடுத்து, சமீபத்தில் நடிகர் சிம்புவும், நிதி அகர்வாலும் காதலித்து வருவதாகவும், விரைவில் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் தகவல் சமூவலைத்தளங்களில் வைரலாக பரவியது.
இவர்கள் இருவரும் சேர்ந்து வாழ்ந்து வருவதாகவும் தகவல் வெளியானது. இந்த வதந்திக்கெல்லாம் நிதி அகர்வால் முற்றுப்புள்ளி வைத்தார்.
நடிப்பதை தாண்டி மற்ற எதிலும் ஆர்வம் கிடையாது. பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறேன் என்று தெரிவித்தார்.
இந்நிலையில், நடிகை நிதி அகர்வால் சமீபத்தில் ஆணுறை விளம்பரம் ஒன்றில் நடித்தார்.
அந்த விளம்பரம் குறித்து நிதி அகர்வால் பேசுகையில் -
செக்ஸ் விஷயத்தில் பெண்களுக்கு ஆணுறை மிக மிக முக்கியம். இதை பெண்கள் கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும்.
பெண்கள் இந்த விஷயத்தில் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அதுமட்டுமல்ல, உஷாராகவும் இருக்க வேண்டும் என்று கூறினார். இவருடைய இந்தப் பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இது குறித்து தனது யூடியூப்பில் பயில்வான் ரங்கநாதன் பேசுகையில் -
நடிகைகள் கூறும் விஷயத்தைதான் நான் சொல்கிறேன். நிதி அகர்வால் இப்படியெல்லாம் பேசினால் கரெக்ட்.. நான் சொன்னால் தப்பா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
தற்போது இந்த விஷயம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.