உடலைக் காட்டினால்தான் சினிமாவில் வாய்ப்பு கிடைக்கிறது... - நடிகை நிதிஅகர்வால் பேச்சால் பரபரப்பு...!

Tamil Cinema Nidhhi Agerwal
By Nandhini Oct 20, 2022 06:18 AM GMT
Report

உடலைக் காட்டினால்தான் சினிமாவில் வாய்ப்பு கிடைக்கிறது என்று நடிகை நிதிஅகர்வால் பேசியுள்ள விவகாரம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகை நிதி அகர்வால்

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் நடிகை நிதி அகர்வால். இவர் இந்தியில் கடந்த 2017ம் ஆண்டு வெளியான ‘முன்னா மைக்கல்’ படத்தின் மூலம் திரைத்துறையில் காலெடி வைத்தார். அதன் பின்பு, தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். ‘ஈஸ்வரன்’ படத்தில் நடிகர் சிம்புவிற்கு ஜோடியாக நடித்திருந்தார் நிதி அகர்வால். இப்படத்தில் இடம்பெற்ற ‘மாங்கல்யம்’ என்ற பாடல் சூப்பர் ஹிட்டடித்தது.

சிம்புவுடன் காதல்?

சமீபத்தில் நடிகர் சிம்புவும், நிதி அகர்வாலும் காதலித்து வருவதாகவும், விரைவில் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் தகவல் சமூவலைத்தளங்களில் வைரலானது. 

இவர்கள் இருவரும் சேர்ந்து வாழ்ந்து வருவதாகவும் தகவல் வெளியானது. இந்த வதந்திக்கெல்லாம் நடிகை நிதி அகர்வால் முற்றுப்புள்ளி வைத்தார். நடிப்பதை தாண்டி மற்ற எதிலும் ஆர்வம் கிடையாது. பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறேன் என்று தெரிவித்திருந்தார்.

Nidhhi Agerwal

உடலைக் காட்டினால்தான் வாய்ப்பு

இந்நிலையில், பேட்டி ஒன்றில் உடலைக் காட்டினால்தான் வாய்ப்பு கிடைக்கிறது என்று நடிகை நிதி அகர்வால் வேதனை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசும்போது, சினிமா துறையில் திறமையைப் பார்த்து வாய்ப்பு கொடுக்கிறார்கள் என்பதை நான் நம்பமாட்டேன். அழகைத்தான் பார்க்கிறார்கள். திறமைக்கு மதிப்பு இல்லை. 20% பேர் மட்டுமே திறமையைப் பார்த்து வாய்ப்பு கொடுக்கிறார்கள் என்று தெரிவித்திருக்கிறார்.

தற்போது இவர் இப்படி பேசியுள்ள விவகாரம் சமூகவலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.