விராட் கோலியை மோசமாக திட்டிய இங்கிலாந்து முன்னாள் வீரர்: கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்

kohli
By Fathima Aug 18, 2021 01:48 PM GMT
Report

இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லியை கடுமையான வார்த்தைகளால் விமர்சித்துள்ளார் இங்கிலாந்து முன்னாள் வீரரான நிக் காம்ப்டன்.

இங்கிலாந்துக்கு சென்றுள்ள இந்திய அணி, ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.

முதல் டெஸ்ட் டிராவில் முடிந்த நிலையில், 2வது டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்றது.

இந்நிலையில் இங்கிலாந்து முன்னாள் வீரரான நிக் காம்ப்டன் விராட் கோஹ்லியை கடுமையாக விமர்சித்துள்ளார்.

அவர் கூறுகையில், மிகவும் இழிவாக பேசக்கூடிய ஒருவர் விராட் கோஹ்லி. 2012-ம் ஆண்டில் விளையாடி போது நானே மிரளும் அளவுக்கு அவர் என்னை நோக்கி அடுக்கடுக்காக வசைபாடினார்.

சச்சின் தெண்டுல்கர், வில்லியம்சன், ஜோ ரூட் போன்ற தலைச்சிறந்த வீரர்கள் எல்லாம் களத்தில் மிகவும் கண்ணியமாக நடந்து கொள்வார்கள். அதற்கு நேர்மாறானவர் கோஹ்லி என்று தெரிவித்துள்ளார்.

இதைப்பார்த்த கோஹ்லியின் ரசிகர்கள் கடுமையாக திட்டித்தீர்த்து வருகின்றனர்.