‘’ வேண்டாம் அழுதிடுவேன் ‘’ நிகோலஸ் பூரணின் டக் அவுட் சோகத்தில் ஐதராபாத் அணி
நிகோலஸ் பூரண் மீண்டும் ஒருமுறை டக் அவுட்டானதால் ஐதராபாத் அணியை ரசிகர்கள் மோசமாக கிண்டல் செய்து வருகின்றனர்.
ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 210ர ரன்களை குவித்தது. இதன் பின்னர் விளையாடிய ஐதராபாத் அணி 149 ரன்களை மட்டுமே எடுத்து மோசமாக தோல்வியடைந்தது.
இதில் ஐதராபாத் அணியின் முன்னணி வீரர்கள் அனைவருமே சொதப்பினர். கேப்டன் கேன் வில்லியம்சன் 2, அபிஷேக் ஷர்மா 9, ராகுல் திரிபாதி டக் அவுட், அப்துல் சமாத் 4 என அடுத்தடுத்து ஏமாற்றம் அளித்தனர்.
ஆனால் நிகோலஸ் பூரண் டக் அவுட்டானது மட்டும் ரசிகர்களால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. இதற்கு காரணம் ஐபிஎல்-ல் அவருக்கும் உள்ள டக் வுட் சாதனைதான்.
கடந்த 2021ம் ஆண்டு பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடிய நிகோலஸ் பூரண் 12 இன்னிங்ஸ்களில் 5 முறை டக் அவுட்டாகி மோசமான சாதனையை படைத்திருந்தார். அதுவும் 0(3) vs டெல்லி, 0(1) vs ராஜஸ்தான், 0(2) vs சிஎஸ்கே, 0(0) vs ஐதராபாத், 0(3) vs பெங்களுரூ என நம்பர் வரிசைப்படி பந்துகளை சந்தித்திருந்தார். கடந்த சீசனில் அவர் விளையாடிய 12 இன்னிங்ஸ்களில் வெறும் 85 ரன்களை மட்டுமே அடித்தார்.
இதனால் மெகா ஏலத்தில் கூட எடுக்கப்பட மாட்டார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஐதராபாத் அணி வாங்கியது. ஆனால் கடந்தாண்டு விட்டதை இந்தாண்டு தொடர்ந்து வருகிறார். ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 9 பந்துகளை சந்தித்து கடைசியில் டக் அவுட்டாகி தான் வெளியேறினார்.
எப்படி ஒரு வீரரால் தொடர்ச்சியாக இப்படி டக் அவுட்டாக முடியும் என ரசிகர்கள் ஆச்சரியத்தில் அடைந்தனர். மேலும் பூரணையும் ஐதராபாத் அணியையும் கிண்டல் செய்யும் வகையில் ட்விட்டரில் மீம்களையும் பதிவிட்டு வருகின்றனர். இனி வரும் போட்டிகளில் அவருக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.