நாடு முழுவதும் NIA சோதனை - உள்துறை அமைச்சர் அமித் ஷா அவசர ஆலேசானை
நாடு முழுவதும் NIA சோதனை நடந்து வரும் நிலையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
நாடு முழுவதும் NIA சோதனை
நேற்று இரவு முதல் கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட 13 மாநிலங்களில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் அலுலகங்கள் மற்றும் நிர்வாகிகளின் வீடுகளில் தேசிய புலனாய்வு அமைப்பு தொடர்ச்சியாக சோதனை நடத்தி வருகிறது.
இந்த சோதனையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோரை கைது செய்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தொடர்ச்சியாக இந்த சோதனையை கண்டித்து நாடு முழுவதும் போராட்டம் என்பது வழுத்து வருகிறது. இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மூத்த உயர் அதிகாரிகளுடன் ஆலேசானை நடத்தி வருகிறார்.
ஆலோசனையில் மத்திய உள்துறை செயலாளர், தேசிய புலனாய்வு முகமையில் டிஜி, என்எஸ்ஏ அமைப்பின் மூத்த அதிகாரிகள் ஆலேசானை கூட்டத்தில் கலந்து கொண்டு நடந்து வரும் சோதனை குறித்து ஆலோசித்து வருகின்றனர்.
நடந்து வரும் சோதனைகளுக்கு எதிராக நடைபெறும் போராட்டம் தொடர்பாகவும், போராட்டத்தில் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் இருக்க மாநில காவல்துறையுடன் இணைந்து செயல்பட்டு பாதுகாப்பை பலப்படுத்தவும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
இந்த சோதனையில் கைது எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பு அலுவலகங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
இந்த ஆலேசானையில் என்ன முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் ஒரு விரிவான அறிக்கையை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.