பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா இடங்களில் என்ஐஏ ரெய்டு : காரணம் என்ன?

By Irumporai Sep 22, 2022 02:37 AM GMT
Report

 பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா இடங்களில் தேசிய புலனாய்வு முகமை எனப்படும் என்.ஐ.ஏ சோதனை நடத்தி வருகிறது.

 பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா

என்.ஐ.ஏ என்று சொல்லப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு கடந்த சில தினங்களுக்கு முன்பாக தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் சுமார் 38 இடங்களில் சோதனை நடத்தியது.

குறிப்பாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்ற அமைப்புக்கு தொடர்புடையவர்களின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. இதில் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா இடங்களில் என்ஐஏ ரெய்டு : காரணம் என்ன? | Nia Raid At Popular Front Of India Places

குற்றம் சாட்டப்பட்ட சையத் ,பெரோஸ் கான், முகமது உஸ்மான், முகமது இர்ஃபான் ஆகியோர் உபா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டனர்.

என்ஐஏ ரெய்டு

இவர்கள் தீவிரவாத சதி செய்ய வேலைகளில் ஈடுபட்டுள்ளனர் என்றும், அதற்கான சிறப்பு பயிற்சிகள் எடுத்துள்ளனர் என்றும், அவர்களிடம் இருந்து கத்திகள் ,இரும்பு கம்பிகள் ,அரிவாள்கள் பறிமுதல் செய்யப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டது.

மத்திய அரசு , நீதித்துறை மற்றும் குறிப்பிட்ட மதத்தினருக்கு எதிரான வகுப்புவாதத்தை துண்டுவது போன்ற உணர்ச்சிகரமான வீடியோக்களை வெளியிடுவது போன்ற செயல்களில் இவர்கள் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் மதுரை ,திண்டுக்கல் ,ராமநாதபுரம் மாவட்டங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர் . திண்டுக்கல் பேகம்பூர் பகுதியில் உள்ள பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் அலுவலகத்தில் என் ஐ ஏ சோதனை நடத்தி வருகிறது.