NIA சோதனை; நாடு முழுவதும் 106 பேர் அதிரடி கைது

Tamil nadu Government Of India Kerala
By Thahir Sep 22, 2022 07:26 AM GMT
Report

நாடு முழுவதும் தேசிய புலனாய்வு முகமை நடத்தி வரும் சோதனையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பைச் சேர்ந்த 106 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாடு முழுவதும் NIA சோதனை 

தேசிய புலனாய்வு முகமை மற்றும் அமலாக்க இயக்குநரகம் 11 மாநிலங்களில் நேற்று இரவு முதல் சோதனை மேற்கொண்டு வருகிறது.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியாவின் அலுவலகம் மற்றும் அதன் நிர்வாகிகளின் இல்லங்களில் சோதனை நடத்தப்பட்டது.

NIA Raid

இந்த நிலையில் பயங்கரவாதிகளை ஆதரித்ததாகக் கூறி, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கிட்டத்தட்ட 106 நிர்வாகிகளை கைது செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் 10 பேர் கைது 

அதிகபட்சமாக கேரளாவில் (22) மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவில் (தலா 20), தமிழ்நாடு (10), அசாம் (9), உத்தரப் பிரதேசம் (8), ஆந்திரப் பிரதேசம் (5), மத்தியப் பிரதேசம் (4) ஆகிய மாநிலங்களில் அதிகபட்சமாக கைது செய்யப்பட்டுள்ளனர்.  புதுச்சேரி மற்றும் டெல்லி (தலா 3) மற்றும் ராஜஸ்தான் (2).

தமிழகத்தில் கைது செய்யப்பட்டுள்ள நிர்வாகிகளை விடுவிக்க கோரி பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பைச் சேர்ந்தவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

NIA சோதனை; நாடு முழுவதும் 106 பேர் அதிரடி கைது | Nia Raid 106 People Were Arrested

கர்நாடகாவில் மட்டும் பெங்களூரு, தட்சிண கன்னடா மாவட்டத் தலைமையகமான மங்களூரு, உத்தர கன்னடாவின் சிர்சி மற்றும் கலபுர்கி ஆகிய இடங்களில் 14 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

"பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்தல், பயிற்சி முகாம்களை ஏற்பாடு செய்தல் மற்றும் தடைசெய்யப்பட்ட அமைப்புகளில் சேர மக்களை தீவிரப்படுத்துதல்" போன்றவற்றில் ஈடுபட்டதாகக் கூறப்படும் நபர்களின் வளாகங்களில் சோதனைகள் நடைபெற்று வருவதாக என்ஐஏ தெரிவித்துள்ளது.

PFI, ஒரு அறிக்கையில், “அதன் தேசிய, மாநில மற்றும் உள்ளூர் தலைவர்களின் வீடுகளில் சோதனைகள் நடைபெறுகின்றன. மாநில கமிட்டி அலுவலகத்திலும் சோதனை நடத்தப்படுகிறது.

எதிர்ப்புக் குரல்களை அடக்க தேசிய புலனாய்வு அமைப்பை  பயன்படுத்தும் பாசிச ஆட்சியின் நகர்வுகளை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம்" என்று அந்த அமைப்பு கூறியுள்ளது.