யூடியூப் பார்த்து துப்பாக்கி தயாரித்த இளைஞர்கள் - NIA அதிகாரிகள் சோதனை
சேலத்தில் யூடியூப் பார்த்து துப்பாக்கி தயாரித்த இளைஞர்கள் வீட்டில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
துப்பாக்கி தயாரித்த இளைஞர்கள்
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே, போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, இரு சக்கர வாகனத்தில் வந்த சேலத்தை சேர்ந்த நவீன் சக்கரவர்த்தி, சஞ்சய் பிரகாஷ் ஆகியோரை சோதனை செய்ததில், அவர்களிடம் துப்பாக்கி, கத்தி, முகமூடி போன்ற ஆயுதங்கள் இருந்துள்ளது.
இதனை தொடர்ந்து அவர்களை விசாரிக்கையில், சேலம் செட்டிச்சாவடி அருகே வீடு வாடகைக்கு எடுத்து தங்கி இருந்தது அங்கு யூடியூப் பார்த்து துப்பாக்கி தயாரித்ததும் தெரியவந்துள்ளது.
சேலம் ஊத்துமலை கல்குவாரியில் இருந்து வரும் லாரிகளில் வெடிகுண்டு வைக்க திட்டம் தீட்டியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
நாட்டில் நடக்கும் தவறுகளை தட்டிக்கேட்க புரட்சியாளர்களாக மாற இருந்ததாகவும், தங்களுக்கு கபிலன் என்பவர் உதவியதாகவும் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனை அடுத்து கபிலனையும் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர் தற்போது அவர்கள் மூவரும், சேலம் மத்திய சிறையில் இருக்கின்றனர்.
NIA அதிகாரிகள் சோதனை
இந்நிலையில், அந்த மூவருக்கும் வேறு எதுவும் தீவிர அமைப்புகளுடன் தொடர்பு இருக்கிறதா என தேசிய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ , அந்த மூவரும் வாடகை கொடுத்து தங்கியிருந்த வீட்டில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
பின்னர் தேதிய புலனாய்வு அதிகாரிகள் அவர்களின் வீட்டில் இருந்து விடுதலை புலிகள் தொடர்பான புத்தகங்கள் மற்றும் முக்கிய ஆவணங்களை எடுத்துச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.