தமிழ்நாட்டில் உள்ள 9 மாவட்டங்களில் NIA அதிகாரிகள் திடீர் சோதனை..!

PMK
By Thahir Jul 23, 2023 03:48 AM GMT
Report

தமிழ்நாட்டில் உள்ள 9 மாவட்டங்களில் NIA அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

பாமக பிரமுகர் கொலை 

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தைச் அடுத்த திருபுவனம் துாண்டில் விநாயகம் பேட்டையைச் சேர்ந்தவர் ராமலிங்கம் 45 வயதாகும் இவர் திருபுவனம் முன்னாள் நகர பாமக செயலாளர் ஆக இருந்து வந்தார்.

NIA officials conduct surprise raids in 9 districts

கடந்த பிப்ரவரி மாதம் 5-ம் தேதி இரவு அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இதனால் அந்த பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது.

இந்த கொலை தொடர்பாக திருவிடைமருதுார் போலீசார் வழக்கு பதிவு செய்து பலரை கைது செய்தனர். பின்னர் இந்த வழக்கு விசாரணை தேசிய புலனாய்வு முகமைக்கு (NIA) மாற்றப்பட்டது.

9 மாவட்டங்களில் சோதனை

தனியாக வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே இந்த கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களின் வீடுகள் மற்றும் அவர்கள் சார்ந்த எஸ்டிபிஐ மற்றும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அலுவலகங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி பல்வேறு ஆவணங்களை எடுதுச் சென்றனர்.

ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக இன்று மீண்டும் என்ஐஏ அதிகாரிகள் சோதனை தொடங்கி உள்ளனர். திருச்சி, விழுப்புரம், தஞ்சாவூர், நெல்லை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் 15க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெறுகிறது.