தமிழ்நாட்டில் 10 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை : காரணம் என்ன ?

By Irumporai May 09, 2023 04:01 AM GMT
Report

நாடு முழுவதும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அவ்வப்போது சோதனை நடத்திவரும் நிலையில் இன்று காலை முதல் தமிழ்நாட்டில் உள்ள 10 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடியாக சோதனை செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

10 இடங்களில் சோதனை 

தமிழ்நாட்டில் பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு தொடர்புடைய பத்து இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக சற்று முன் தகவல் வெளியாகி உள்ளன.

தமிழ்நாட்டில் 10 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை : காரணம் என்ன ? | Nia Officers Raid In Tamil Nadu

  பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா

சென்னை மதுரை திருச்சியை தேனி உள்ளிட்ட நகரங்களிலும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடந்து வருவதாக கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்னால் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு மத்திய அரசு தடை விதித்தது என்பது குறிப்பிடத்தக்கது