சென்னை உள்ளிட்ட 8 இடங்களில் NIA அதிகாரிகள் சோதனை
Tamil nadu
Chennai
By Thahir
சென்னை,மயிலாடுதுறை,காரைக்கால் உள்ளிட்ட 8 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
NIA அதிகாரிகள் சோதனை
மயிலாடுதுறை மாவட்டத்தில் அரியலுார்,நீடூர்,எலந்தங்குடி,உத்தங்குடி,கிளியனுார்,ஆகிய இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள சுண்ணாம்புகார வீதியுள்ள வீட்டிலும் என்ஐஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக 5 பேர் கைது செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக நிதி திரட்டியது தொடர்பான வழக்கில் சென்னையில் சாதிக் என்பவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
திரையுலகில் புதிய டிரெண்ட்... புதிய எலக்ட்ரிக் கார் வாங்கிய பிரபுதேவா! விலை எவ்வளவு தெரியுமா? Manithan