என்.ஐ.ஏ சோதனை .. இதனை ஏற்றுக்கொள்ள முடியாது : ராகுல் காந்தி கடும் கண்டனம்

Indian National Congress Rahul Gandhi
By Irumporai 1 வாரம் முன்

நாடு முழுவதும் நேற்று நடைபெற்ற என்.ஐ.ஏ சோதனை குறித்து பேசிய ராகுல் காந்தி, ‘மதவாதமும், வன்முறையும் எந்த வடிவில் இருந்தாலும் ஏற்றுக்கொள்ள முடியாது.’ என தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

என்.ஐ.ஏ சோதனை

தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட நாடு முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா, எஸ்டிபிஐ அலுவலகம் மற்றும் அதன் முக்கிய நிர்வாகிகளின் வீடுகளில் என்ஐஏ அதிரடி சோதனையில் நேற்று முன்தினம் இரவு முதல் ஈடுபட்டது.

என்.ஐ.ஏ சோதனை ..  இதனை  ஏற்றுக்கொள்ள முடியாது  : ராகுல் காந்தி கடும் கண்டனம் | Nia Investigating Rahul Gandhi Speech

பயங்கரவாதிகளுக்கு நிதி திரட்டிய புகாரில் தமிழகத்தில் 10 பேர் உள்பட நாடு முழுவதும் நேற்று வரை 106 பேரை தேசிய புலனாய்வு முகமை என்.ஐ.ஏ கைது செய்துள்ளது.

ராகுல் கண்டனம்

இந்த அதிரடி சோதனை, கைது நடவடிக்கைகள் குறித்து , பாரத ஒற்றுமை யாத்திரையில் ஈடுபட்டு வரும் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியிடம் கேட்கப்பட்டபோது,  மதவாதமும், வன்முறையும் எந்த வடிவில் இருந்தாலும் ஏற்றுக்கொள்ள முடியாது. அவற்றை எதிர்த்து நாம் போராட வேண்டும் என தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.