அடக்குமுறையின் உச்சம்; பெண்கள் பணியாற்ற தடை - அடுத்த ரூல்!
பெண்கள் என்ஜிஓக்களில் பணியாற்ற தாலிபான்கள் தடை விதித்துள்ளனர்.
கடும் கட்டுப்பாடு
தாலிபான் ஆட்சி அமைத்ததில் இருந்து ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. தாலிபான் அமைப்பின் பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

தலை முதல் கால் வரை முழுவதுமாக மறைக்கும் வகையிலான புர்கா அணிய வேண்டும், பூங்கா, ஜிம் செல்லக்கூடாது என்பன போன்ற பல தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. பெண்கள் தனியாக பயணிக்க கூடாது. வாகனங்கள் ஓட்டக்கூடாது.
பணியாற்ற தடை
தலை முதல் கால் வரை முழுவதுமாக மறைக்கும் வகையிலான புர்கா அணிய வேண்டும், பூங்கா, ஜிம் செல்லக்கூடாது என்பன போன்ற பல தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. சமீபத்தில் கல்லூரி செல்லவும் மறுக்கப்பட்டது. தொடர்ந்து, தற்போது அனைத்து உள்நாடு மற்றும் வெளிநாட்டு அரசு சாரா நிறுவனங்களான (என்ஜிஓ) பெண்களை பணியமர்த்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
பணியில் உள்ளவர்களையும் வீட்டுக்கு அனுப்ப உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்தியில், ‛‛நாட்டில் பெண்களுக்கான இஸ்லாமிய ஆடைக் குறியீடு பற்றி நிர்வாகம் அறிவுரை வழங்கி உள்ளது. இருப்பினும் இது கடைப்பிடிக்கப்படவில்லை.
இதனால் மறுஅறிவிப்பு வரும்வரை பெண் ஊழியர்கள் வேலை செய்ய அனுமதிக்கப்படவில்லை'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.