நிலங்களை பறித்துக் கொடுக்க திமுக அரசு முனைப்பு காட்டுவது மக்களுக்கு செய்கின்ற பச்சைத்துரோகம் - சீமான் காட்டம்!

Naam tamilar kachchi DMK Governor of Tamil Nadu Seeman
By Jiyath Jul 26, 2023 05:45 PM GMT
Report

என்எல்சி விவகாரம் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். 

என்எல்சி விவகாரம்  

கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனம் இரண்டாவது சுரங்க விரிவாக்க பணிக்காக கத்தாழை , கரிவெட்டி, மேல் வளையமாதேவி, கீழ் வலையமாதேவி, ஆதனூர் ஆகிய கிராமங்களை எனஎல்சி நிர்வாகம் விவசாயிகளின் நிலங்களை கையகப்படுத்தி இழப்பீடு வழங்கியுள்ளது. இதில் இழப்பீடு முழுமையாக வழங்கவில்லை எனவும், வீட்டுக்கு ஒருவருக்கு வேலை வழங்க வேண்டும்,மாற்று குடியிருப்பு மற்றும் கடந்த 2003 முதல் 2013 வரை நிலத்தை கையகப்படுத்தியதற்கு ரூ.6 லட்சம் வழங்கியவர்களுக்கு கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகள் காரணமாக பல்வேறு பேச்சு வார்த்தைகள் நடைபெற்றது.

நிலங்களை பறித்துக் கொடுக்க திமுக அரசு முனைப்பு காட்டுவது மக்களுக்கு செய்கின்ற பச்சைத்துரோகம் - சீமான் காட்டம்! | Neyveli Is A Betrayal People Seeman Condemns Ibc

இதை ஒரு சில பொதுமக்கள்,விவசாயிகள் மறுத்து வந்தனர்.இதற்காக அவ்வப்போது போராட்டங்களும் நடைபெற்று வந்தது. இதனைத் தொடர்ந்து நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகம், என்எல்சி நிர்வாகம்,விவசாயிகள் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதனால் உடன்பாடு ஏற்பட்டது. இந்நிலையில் இன்று காலை வலையாமாதேவி பகுதியில் பரவனாரு விரிவாக்கம் வாய்க்கால் வெட்டும் பணிக்காக என்எல்சி இந்தியா நிறுவனம் 30க்கும் மேற்பட்ட ராட்சச மண் வெட்டும் இயந்திரங்கள் கொண்டு ஒன்றறை கிலோ மீட்டர் தூரத்துக்கு வாய்க்கால் அணை போடும் பனி நடைபெற்றது.

நிலங்களை பறித்துக் கொடுக்க திமுக அரசு முனைப்பு காட்டுவது மக்களுக்கு செய்கின்ற பச்சைத்துரோகம் - சீமான் காட்டம்! | Neyveli Is A Betrayal People Seeman Condemns Ibc

இதில் விளைநிலங்களில் நெல் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர் அழிக்கப்பட்டு அதில் அணைகள் போடப்பட்டன. இதனால் அங்கு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இதற்காக சுமார் 500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதற்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

சீமான் கண்டனம் 

அந்த பதிவில் " நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின்‌ இரண்டாவது சுரங்கப்‌ பணிகளுக்காக மேல்‌வளையமாதேவி உள்ளிட்ட கிராமங்களில்‌ விளைந்து நிற்கும்‌ நெற்பயிர்களைஅழித்து, ஏழை எளிய மக்களின்‌ நிலங்களை வலுக்கட்டாயமாக அபகரிக்கும்‌ நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின்‌ செயல்‌ வன்மையான கண்டனத்திற்குரியது.

நிலங்களை பறித்துக் கொடுக்க திமுக அரசு முனைப்பு காட்டுவது மக்களுக்கு செய்கின்ற பச்சைத்துரோகம் - சீமான் காட்டம்! | Neyveli Is A Betrayal People Seeman Condemns Ibc

தங்கள்‌ நிலம்‌ பறிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடும்‌ விவசாயிகளை திமுக அரசு காவல்துறையின்‌ மூலம்‌ அடக்குமுறைகளை ஏவி கைது செய்வது அப்பட்டமான எதேச்சதிகாரப்போக்காகும்‌ நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தைத்‌ தொடங்குவதற்காகத்‌ தங்கள்‌ நிலங்களை விட்டுக்கொடுத்த நெய்வேலியைச்‌ சுற்றியுள்ள கிராமங்களைச்‌ சேர்ந்த பூர்வகுடி தமிழர்கள்‌ தற்போது வெறும்‌ கூலிகளாக மட்டுமே வேலை செய்யக்கூடிய அவலநிலை நிலவுகிறது. அந்தளவுக்கு நெய்வேலி நிறுவனத்தில்‌ வடமாநிலத்தவர்‌ ஆதிக்கம்‌ மேலோங்கி, மண்ணின்‌ மைந்தர்கள்‌ முற்றிலுமாக புறக்கணிக்கப்படும்‌ கொடுஞ்சூழல்‌ உள்ளது.

ஏற்கெனவே நிலம்‌ வழங்கிய குடும்பங்களுக்கு ஒப்பந்தப்படி பணி வழங்காமலும்‌, பல்லாயிரக்கணக்கான ஒப்பந்தத்‌ தொழிலாளர்களின்‌ பணியை நிரந்தரம்‌ செய்யாமலும்‌, தொழிற்பழகுநர்‌ பயிற்சி முடித்த தமிழ்‌ இளைஞர்களுக்குப்‌ பணி வழங்காமலும்‌ தொடர்ந்து இனப்பாகுபாடு கடைபிடிக்கிறது நெய்வேலி நிலக்கரி நிறுவனம்‌. அதுமட்டுமின்றி, 2025 ஆம்‌ ஆண்டுக்குள்‌ நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தைத்‌ தனியாருக்குத்‌ தாரைவார்க்கவும்‌ மோடி அரசு திட்டமிட்டுள்ளது. விரைவில்‌ தனியாருக்குத்‌ தாரைவார்க்கப்‌ போகும்‌ நிறுவனத்திற்கு தமிழ்‌ மக்களின்‌ நிலங்களை அடிமாட்டு விலைக்கு ஒப்படைக்க தமிழ்நாடு அரசு துணைபோவது ஏன்‌?

நிலங்களை பறித்துக் கொடுக்க திமுக அரசு முனைப்பு காட்டுவது மக்களுக்கு செய்கின்ற பச்சைத்துரோகம் - சீமான் காட்டம்! | Neyveli Is A Betrayal People Seeman Condemns Ibc

நெய்வேலி நிறுவனத்தில்‌ பறிபோகும்‌ தமிழர்களின்‌ உரிமையைப்‌ பெற்றுக்கொடுக்க எவ்வித முயற்சியும்‌ எடுக்காத திமுக அரசு, தமிழர்‌ நிலங்களை மட்டும்‌ பறித்துக்கொடுக்க முனைப்புக்‌ காட்டுவது தமிழ்‌ மக்களுக்குச்‌ செய்கின்ற பச்சைத்துரோகமாகும்‌. ஏற்கெனவே நிலக்கரி எடுப்பதற்காக தமிழர்களிடம்‌ பறிக்கப்பட்ட 1000 ஏக்கர்‌ நிலங்கள்‌ இன்னும்‌ பயன்படுத்தாது இருப்பில்‌ உள்ள நிலையில்‌, மேலும்‌, மேலும்‌ பல்லாயிரம்‌ ஏக்கர்‌ நிலங்களை வலுக்கட்டாயமாக எதற்குப்‌ பறிக்க வேண்டும்‌? நிலத்திற்கு உரிய இழப்பீடும்‌, நிலம்‌ வழங்கும்‌ குடும்பத்தில்‌ ஒருவருக்கு அரசு வேலையும்‌ வழங்க வேண்டும்‌ என்ற பூர்வகுடி தமிழர்களின்‌ கோரிக்கையை ஏற்க மறுக்கும்‌ நெய்வேலி நிறுவனத்திற்கு,

நிலங்களை அளிக்க வேண்டும்‌ என்று கட்டாயப்படுத்துவது எவ்வகையில்‌ நியாயமாகும்‌? பொதுத்துறை நிறுவனமாக இருக்கும்போதே உரிய இழப்பீடும்‌, நிரந்தரப்‌ பணியும்‌ வழங்க மறுக்கும்‌ நிலையில்‌, விரைவில்‌. தனியார்‌ மயமாகப்போகும்‌ நிறுவனத்தை நம்பி தமிழர்கள்‌ தங்கள்‌ நிலங்களை எவ்வாறு ஒப்படைக்க முடியும்‌? நிலங்களை வழங்க மறுக்கும்‌ விவசாயிகளை பிரட்டி திமுக அரசு அச்சுறுத்துவதும்‌, கைது செய்து சிறைபடுத்துவதும்‌ கொடுங்கோன்மையின்‌ உச்சமாகும்‌. ஆகவே, விவசாயிகளின்‌ கடும்‌ எதிர்ப்பினையும்‌ மிறி, சிறிதும்‌ மனச்சான்று இன்றி விளைந்த பயிர்களை அழித்து, விளைநிலங்களில்‌ இரண்டாவது சுரங்கப்பணிகளைத்‌ தொடங்கியுள்ள நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின்‌ அத்துமீறலை இந்திய ஒன்றிய மற்றும்‌ தமிழ்நாடு அரசுகள்‌ உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டுமென நாம்‌ தமிழர்‌ கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்‌.

நிலங்களை பறித்துக் கொடுக்க திமுக அரசு முனைப்பு காட்டுவது மக்களுக்கு செய்கின்ற பச்சைத்துரோகம் - சீமான் காட்டம்! | Neyveli Is A Betrayal People Seeman Condemns Ibc

மேலும்‌, நிலங்களைத்‌ தர மறுக்கும்‌ விவசாயிகளை கைது செய்யும்‌ போக்கினை திமுக. அரசு கைவிடுவதோடு, தனியார்‌ மயமாகவிருக்கும்‌ நெய்வேலி நிலக்கரி நிறுவனம்‌ வலுக்கட்டாயமாக தமிழ்‌ மக்களின்‌ நிலங்களை அபகரிப்பதற்குத்‌ துணைபோவதையும்‌ கைவிட வேண்டுமென்றும்‌ கேட்டுக்கொள்கிறேன்‌. மேலும் விளைந்த நெற்பயிர்களை அழித்து, சுரங்கப்பணிகளைத்‌ தொடங்கியுள்ள நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின்‌ அத்துமீறலை இந்திய ஒன்றிய மற்றும்‌ தமிழ்நாடு அரசுகள்‌ உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று சீமான் தெரிவித்துள்ளார்.