அடுத்த வார ஊரடங்கில் என்னென்ன தளர்வுகள் - நாளை முதல்வர் ஆலோசனை!
relaxation
next week lockdown
By Anupriyamkumaresan
தமிழகத்தில் அடுத்த வார ஊரடங்கு குறித்து தமிழக முதல்வர் நாளை காலை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார். தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த மே மாதம் முதல், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
இந்த ஊரடங்கானது தற்போது படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்டு, தொற்று குறைந்த 27 மாவட்டங்களில் அனைத்து கடைகளும் திறக்கப்பட்டது.
இந்த நிலையில் இந்த வார ஊரடங்கானது வரும் 28-ம் தேதி முடிவடையவுள்ள நிலையில், நாளை காலை 11 மணிக்கு மருத்துவ வல்லுநர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை மேற்கொள்கிறார்.
சென்னை தலைமை செயலகத்தில் நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில் ஊரடங்கு தொடர்பாகவும், கூடுதல் தளர்வுகள் வழங்குவது தொடர்பாகவும் ஆலோசனை மேற்கொள்ளப்படும்.