கமல் எப்போது வருவார்? அடுத்த வாரமும் இல்லையா - ரசிகர்கள் அதிர்ச்சி
kamalhaasan
ramya krishnan
By Anupriyamkumaresan
அடுத்த வாரமும் நடிகை ரம்யா கிருஷ்ணன் தான் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து, அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு பதிலாகதான் தற்போது நடிகை ரம்யா கிருஷ்ணன் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
நேற்று முன் தினம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரம்யா கிருஷ்ணன் அவருக்கு பதிலாக தொகுப்பாளராக அறிமுகம் செய்து வைத்தார் கமல்.
இந்த நிலையில் அடுத்த வாரமாவது கமல் வந்துவிடுவாரா என ரசிகர்கள் ஆர்வமாக காத்து கொண்டிருந்த நிலையில், அடுத்த வாரமும் ரம்யா கிருஷ்ணன் தான் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.