என்னோட அடுத்த டார்க்கெட் கோகோ கோலா : மாஸ் காட்டும் எலன் மஸ்க்

Elon Musk
By Irumporai Apr 28, 2022 03:30 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

பிரபல சமூக வலைத்தளமானன் ட்விட்டர் தளத்தை விலைக்கு வாங்கி கெத்து காட்டிய எலன் மஸ்க் தற்போது பிரபல குளிர்பான நிறுவனமான கோகோ கோலா நிறுவனத்தை விலைக்கு வாங்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

ட்விட்டரின் பங்குகளை வாங்கிய பிறகு எலன் மஸ்க் தனது ட்விட்டர் பதிவில் : சுதந்திரமான பேச்சு” என்பதன் மூலம், நான் சட்டத்திற்குப் பொருந்துவதைக் குறிக்கிறேன். எனினும்,நான் சட்டத்திற்கு அப்பாற்பட்ட தணிக்கைக்கு எதிரானவன்.

மக்கள் பேச்சு சுதந்திரத்தை குறைக்க விரும்பினால்,அதற்கான சட்டங்களை இயற்றுமாறு அரசிடம் கேட்பார்கள்.எனவே,சட்டத்தை மீறுவது மக்களின் விருப்பத்திற்கு எதிரானது.

அதே சமயம்,பொது நம்பிக்கைக்கு தகுதியானதாக இருக்க ட்விட்டர் அரசியல் ரீதியாக நடுநிலையாக இருக்க வேண்டும்.ஆனால்,ட்விட்டர் அவ்வாறு இருந்தால் தீவிர வலதுசாரிகளோ,இடது சாரிகளோ கோபம்தான் அடைவார்கள்.

இதனைத் தொடர்ந்து,ட்விட்டர் டிஎம்களில் சிக்னல் போன்ற என்ட் டு என்ட் என்க்ரிப்ஷன் இருக்கும்,எனவே உங்கள் செய்திகளை யாரும் உளவு பார்க்கவோ அல்லது ஹேக் செய்யவோ முடியாது என்று தெரிவித்துள்ளார்.    

இந்த நிலையில் தற்போது கோகோ கோலா நிறுவனத்தின் பங்குகளை எலன் மஸ்க் வாங்க உள்ளதாக கூறியுள்ளது இணையவாசிகளிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.