ஐபிஎல் தொடரில் பார்வையாளர்களுக்கு அனுமதி - பிசிசிஐ தகவலால் ரசிகர்கள் உற்சாகம்!
இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற ஐபிஎல் போட்டிகள் பாதியில் கொரோனா காரணமாக தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் தற்பொழுது செப்டம்பர் மாதம் 19ஆம் தேதி துவங்கி அக்டோபர் மாதம் 15 ஆம் தேதி வரை மீதமல் ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் சென்ற ஆண்டு போல நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் போட்டிகள் சென்ற ஆண்டு போல் இல்லாமல் இந்த ஆண்டு 60 சதவீத பார்வையாளர்களுடன் நடைபெறப் போவதாக தற்போது பிசிசிஐ பொருளாளர் அருண் துமால் நம்பிக்கை தற்பொழுது நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் பார்வையாளர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டால் நிச்சயமாக அவர்கள் அனைவரும் மைதானத்திற்கு போட்டியை காண அனுமதிக்கப்படுவார்கள் என்றும், 60 சதவீத பார்வையாளர்களுடன் நிச்சயமாக மீதமுள்ள ஐபிஎல் போட்டிகள் நடைபெறபோகிறது என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
2011ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் 10 அணிகள் களம் இறங்கியது. அதற்கு அடுத்த இரண்டு ஆண்டுகள் 2012 மற்றும் 2013ம் ஆண்டுகளில் மொத்தம் ஒன்பது அணிகள் களம் இறங்கி விளையாடியது. அதற்கு பிறகு தற்பொழுது வரை 8 அணிகள் மட்டுமே ஐபிஎல் தொடரில் பங்கேற்று விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அடுத்த ஆண்டு நிச்சயமாக மேலும் 2 புதிய அணிகள் ஐபிஎல் தொடரில் இணைய உள்ளது என்று முன்னரே தகவல் வெளியானது. தற்பொழுது அந்த தகவலை உறுதிப்படுத்தும் விதமாக பிசிசிஐ பொருளாளர் அருண் துமால், அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ஐபிஎல் தொடர் 10 அணிகளுடன் நடைபெறப் போவதாக நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் நடந்து முடிந்தவுடன் ஒவ்வொரு அணியும் தங்களது அணியில் மூன்று முதல் ஐந்து வீரர்கள் மட்டுமே தக்க வைத்துக் கொள்ள முடியும். மற்ற வீரர்கள் அனைவரும் அணியில் இருந்து வெளியேற்றப்பட்டு விடுவார்கள். மீண்டும் ஒரு மெகா ஐபிஎல் ஏலம் நடைபெற இருக்கிறது.
அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் புதிதாக இணைய உள்ள இரண்டு அணிகள் குறித்து மேலும் பல தகவல்கள் கூடிய விரைவில் அறிவிக்கப்படும் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் கணித்துள்ளனர். 2 புதிய அணிகளௌ நடைபெற இருக்கின்ற மெகா ஏலத்தில் பங்கேற்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.