‘‘அடுத்த நான்கு வாரம் ரொம்ப முக்கியம் '’ - வார்னிங் கொடுக்கும் மத்திய சுகாதாரத்துறை

covid19 india health people
By Jon Apr 07, 2021 04:49 PM GMT
Report

கடந்த ஆண்டை விட இந்த மாதம் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக இந்தியாவில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. ஆனாலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.

கடந்த மாதமெல்லாம் 50 ஆயிரத்திற்கும் கீழ் இருந்த பாதிப்புகள் தற்போது வேகமாக அதிகரித்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி இந்தியாவில், புதிதாக 1,15,736 பேர் கொரோனாவால் பாதித்துள்ளனர்.  

‘‘அடுத்த நான்கு வாரம் ரொம்ப முக்கியம்

இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,28,01,785 ஆக உயர்ந்தது. புதிதாக 630 பேர் இறந்துள்ளனர். இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,66,177 ஆக உயர்ந்துள்ளது. இதன்மூலம், கடந்த ஆண்டை விட இந்த முறை கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதாக தெரிவித்துள்ள மத்திய சுகாதாரத்துறை.

கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதில் அடுத்த நான்கு வாரங்கள் மிகவும் முக்கியமானவை என எச்சரித்துள்ளது. கொரோனா பரிசோதனைகளோடு நோய் தொற்று ஏற்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்காணிக்கத் தவறியது, கோவிட் தடுப்பு நடைமுறைகளை முறையாக பின்பற்றாததே பாதிப்பு அதிகரிக்க காரணம் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.