ரோகித் இல்லை...அடுத்த 10 வருடத்திற்கு இந்தியாவின் கேப்டன் இவர்தான் - அடித்து சொல்லும் முன்னாள் இந்திய வீரர்
இந்திய அணியின் கேப்டன் குறித்து முன்னாள் இந்திய வீரர் சபா கரீம் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் இந்திய ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளின் கேப்டனாக விராட் கோலிக்கு பதில் ரோகித் சர்மா நியமிக்கப்பட்டார். இதனிடையே காயம் காரணமாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் ரோகித் சர்மா விலக புதிய கேப்டனாக கே.எல்.ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார். அதேசமயம் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் முதுகுவலியால் கேப்டன் விராட் கோலி விலக கே.எல்.ராகுல் அணியை வழி நடத்தினார்.
இதுகுறித்து முன்னாள் இந்திய வீரர் சபா கரீம் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். அதில் கே.எல்.ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்டது மிகச் சிறந்த முடிவு என்று என்னால் நம்பிக்கையாக கூற முடியும். அடுத்த பல வருடங்களுக்கு இவர்தான் அணியை வழிநடத்த போகிறார். அடுத்த பத்து வருடங்களில் இவர் மிகப் பெரிய வீரராக மாறி இருப்பார்.
அவர் பேட்டிங்கில் மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அதே நேரத்தில் அவர் வைத்திருக்கும் பணி நெறிமுறைகள் அவரை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்ல போகிறது. பஞ்சாப் அணியில் விளையாடி கொண்டிருக்கும் போதே அதற்கான பல பண்புகளை நான் அவரிடம் பார்த்தேன். நீங்கள் ஒரு கேப்டனை நியமிக்கும் போது அவரது முதன்மையான திறமை முன்னேறி இருக்கிறதா என்று பார்க்கவேண்டும்.
அது இவரிடம் அதிகமாகவே இருக்கிறது. பேட்டிங் மிகச் சிறப்பாக ஆடிக் கொண்டிருக்கிறார். பொறுப்பு அவரிடம் வரும்போது இன்னும் சிறப்பாகத்தான் விளையாடுவார் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை எனவும் பாபா கரீம் கூறியுள்ளார்.
You May Like This

விருது வாங்க சென்ற இடத்தில் அஜித் மகனுக்கு அடித்த லக்.. குடியரசு தலைவருடன் லீக்கான புகைப்படம் Manithan
