மக்களே கொரோனா இன்னும் அழியவில்லை : அடுத்த திரிபு எப்படி இருக்கும் தெரியுமா ? எச்சரிக்கும் who

who covid19 omicron
By Irumporai Feb 09, 2022 11:49 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

உலகையே அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரோனா தற்போது ஒமைக்ரான் வைரஸாக உருமாறி உலகையே அச்சுறுத்தி வருகின்றது.

இந்த நிலையில் உலக சுகாதார அமைப்பின் கொரோனா தொழில்நுட்ப பிரிவின் தலைவர் மரியா வான் கெர்கோவ். இன்னும் சில காலத்திற்கு கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை உலக மக்கள் அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என கூறியுள்ளார்.

மேலும், தற்போது புதிதாக உருவாகியுள்ள ஒமைக்ரான் கொரோனா திரிபுகளின் கடைசியாக இருக்காது, மேலும் சில கொரோனா திரிபுகளில் ஒமைக்ரான் கடைசியாக இருக்காது எனக் கூறினார். மேலும் சில திரிபுகள் மக்களைத் தாக்க வாய்ப்புள்ளது.

கொரோனாவின் அடுத்த திரிபு, ஒமைக்ரானைவிட தீவிரமாக தொற்றும் தன்மை கொண்டதாக இருக்கும். ஒமைக்ரான் பாதித்தவர்களுக்கு, இந்த புதிய உருமாறிய வகை ஒமைக்ரான் பாதிப்பை ஏற்படுத்துமா என்பது குறித்து தெளிவான விளக்கம் ஏதுமில்லை.

அதற்குப் பிறகும் சில திரிபுகள் ஏற்படக்கூடும். அடுத்தடுத்த திரிபுகளுக்கு எதிராக தடுப்பூசிகளின் எதிர்ப்புத்திறன் குறையக்கூடும். எனினும், நோய்த் தொற்று ஆபத்தையும் உயிரிழப்பையும் தடுப்பூசி பெருமளவு தடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

உலகம் முழுவதும் தற்போது கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் நாடுகளில் உலக சுகாதார நிறுவனம் மிகவும் உன்னிப்பாகக் கவனித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.