தமிழகத்தில் அடுத்த முதல்வர் யார்? அமோக வெற்றி பெறும் கட்சி இதுதானாம்!

election dmk ntk aiadmk
By Jon Mar 30, 2021 11:57 AM GMT
Report

சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க கூட்டணி 44% வாக்குகளை பெற்று, 131 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று பிரபல தொலைக்காட்சி நடத்திய கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது. சட்டமன்ற தேர்தலில் எந்த கூட்டணி வெற்றி பெறும் என்று பிரபல தொலைக்காட்சி ஒன்று கருத்து கணிப்புகளை தற்போது வெளியிட்டிருக்கிறது.

தமிழகத்தை ஐந்து மண்டலங்களாகப் பிரித்து 234 தொகுதிகளிலும் ஒரு வாக்குச்சாவடிக்கு 20 பேர் என்ற அடிப்படையில் 2900 வாக்குசாவடிகளின் வாக்காளர்களிடம் கருத்து கணிப்பு நடத்தப்பட்டுள்ளது. இந்த கருத்து கணிப்பு வருமாறு - அதிமுகவிற்கு பக்க பலமாக இருக்கும் மேற்கு மண்டலத்தில் அதிமுக கூட்டணி 46.5% வாக்குகளை பெறும் என்றும், திமுக 38.5% வாக்குகளை பெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மண்டலத்தில் அதிமுக கூட்டணி 39% வாக்குகளை பெற்று பின்னடைவை சந்திக்கும் என்றும் திமுக கூட்டணி 45% வாக்குகள் பெறும்.

டெல்ட்டா மண்டலத்தில் அதிமுக கூட்டணி 43% வாக்குகளும், திமுக கூட்டணி 44% வாக்குகளும் பெறும் என்றும், வடக்கு மண்டலத்தில் அதிமுக கூட்டணி 45% வாக்குகளை பெறும், திமுக கூட்டணி 41% வாக்குகளை பெறும். பல்வேறு காரணங்களால் அதிமுகவின் வாக்கு வங்கி சரியும் என்று கூறப்பட்ட தெற்கு மண்டலத்தில், அதிமுக கூட்டணி 43% வாக்குகளும், திமுக கூட்டணி 42.8% வாக்குகளும் பெறும். மாநில அளவில் அதிமுக கூட்டணி 44% வாக்குகளை பெறும் என்று கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம் திமுக கூட்டணிக்கு 42% வாக்குகள் மட்டுமே கிடைக்குமாம். கடந்த ஐந்து ஆண்டுகளில் அதிமுக அரசின் செயல்பாடுகள் திருப்தியளிப்பதாக 53% மக்கள் தெரிவித்துள்ளனர். இது அதிமுக அரசின் திட்டங்கள் மக்களிடம் சென்றடைந்துள்ளதோடு பயனுள்ளதாகவும் அமைந்துள்ளது என்பதை வெளிக்காட்டுகிறது.

தமிழகத்தில் அடுத்த முதல்வர் யார்? அமோக வெற்றி பெறும் கட்சி இதுதானாம்! | Next Chief Minister Tamilnadu Party Win

தொகுதிகளின் அடிப்படையில் அதிமுக கூட்டணி 131 இடங்களில் வெற்றி பெறும் என்றும் திமுக கூட்டணி 102 இடங்களிலும், மற்ற கட்சிகள் 1 இடத்திலும் வெற்றி பெறும் என்றும் கருத்து கணிப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பெரும்பான்மை கருத்து கணிப்புகள், அதிமுக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.