சென்னை அணிக்கு கேப்டன் தோனி இல்லன..இவுங்க தான்..சுரேஷ் ரெய்னா பரபரப்பு பேச்சு..!
சென்னை அணியில் இருந்து தோனி ஓய்வு பெற்றால் அணியை வழி நடத்த தகுதி வாய்ந்த வீரர்கள் இவர்கள் தான் என சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.
கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் ஐபிஎல் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் இதுவரை 14 ஐபிஎல் போட்டிகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன.இந்த போட்டிக்கு பெரும்பாலான ரசிகர்கள் இருந்து வருகின்றனர்.
வரும் மார்ச் 26 ஆம் தேதி 15 வது ஐபிஎல் போட்டிகள் தொடங்க உள்ளது.இந்த தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கடந்த தொடரின் ரன்னரான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்ள உள்ளது.
அந்தவகையில், ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் விலை போகாவிட்டாலும், இந்த வருட ஐபிஎல் தொடருக்கான வர்ணனையாளர்களில் ஒருவராக செயல்பட உள்ள சுரேஷ் ரெய்னா, தோனிக்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்த வாய்ப்புள்ள வீரர் யார் என்பது குறித்தான தனது கணிப்பையும் வெளிப்படுத்தியுள்ளார்.
சென்னை அணியை தோனியின் ஓய்விற்கு பிறகு வழிநடத்த உள்ள வீரர் யார் என்பது குறித்தான தனது கருத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.
இது குறித்து சுரேஷ் ரெய்னா பேசுகையில், “அம்பத்தி ராயூடு, ஜடேஜா, பிராவோ, ராபின் உத்தப்பா போன்ற சீனியர் வீரர்கள் இருப்பது சென்னை அணியின் பலம்.
இந்த நான்கு பேருமே சென்னை அணியை வழிநடத்த தகுதியானவர்கள் தான், இருந்த போதிலும் சென்னை அணியின் அடுத்த கேப்டனாக ரவீந்திர ஜடேஜா நியமிக்கப்படுவதற்கே அதிக வாய்ப்புகள் உள்ளது” என்று தெரிவித்தார்.