மீண்டும் ஊரடங்கு? இந்தியாவில் அடுத்த 40 நாட்கள் தான் முக்கியம் - சுகாதாரத்துறை எச்சரிக்கை
ஜனவரி மாதத்தின் நடுப்பகுதியில் கொரோனா தொற்று அதிகரிக்கலாம் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா அதிகரிக்க வாய்ப்பு
சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட நிலையில் அந்நாடு மட்டுமின்றி ஜப்பான், தென்கொரியா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது.
இதையடுத்து இந்தியாவில் மக்கள் முககவசம் அணியவேண்டும். மற்றும் கைகளை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இந்த நிலையில், அடுத்து வரும் 40 நாட்கள் மிக முக்கியமானவை என மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவிக்கின்றன.
ஜனவரி மத்தியில் கொரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் அவை கூறுகின்றன.
இதற்கு முன் ஏற்பட்ட தொற்றின் அடிப்படையில் கிடைத்த அனுபவத்தின் படி இவ்வாறு கணிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.