தமிழகத்திற்கு பேராபத்து: அடுத்த பத்து நாள் ரொம்ப கவனம்

corona tamilnadu careful tendays
By Irumporai Aug 26, 2021 10:09 AM GMT
Report

தமிழகத்தில் அடுத்த 10 நாட்கள் மிக கவனமாக இருக்க வேண்டும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பரவல் தற்போது குறைந்து வருகிறது. இந்த நிலையில் நமது பக்கத்து மாநிலமான கேரளாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.

அதே சமயம் தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்களுடன் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கினை அமல்படுத்தியுள்ளது .

இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், கேரளாவில் கொரோனா பரவல் அதிகரிப்பால் தமிழகத்தில் அடுத்த 10 நாட்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்  எனவும் தமிழகத்தில் தற்போது 14 லட்சம் டோஸ் தடுப்பு மருந்துகள் கையிருப்பில் உள்ளதாகவும், இவை இன்னும் 3 நாட்களுக்கு போதுமானது என தெரிவித்துள்ளார்.