காயம் காரணமாக விலகிய கான்வே - வேறு வீரரை அறிவித்தது நீயூசிலாந்து அணி: யார் தெரியுமா?
காயம் காரணமாக இறுதி போட்டியில் இருந்து விலகியுள்ள கான்வேவிற்கு பதிலாக டிம் செஃபர்ட் ஆடும் லெவனில் சேர்க்கப்படுவார் என நியூசிலாந்து அணி அறிவித்துள்ளது.
டி.20 போட்டிகளுக்கான சாம்பியனை தீர்மானிக்கும் டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் துபாயில் துவங்கியது. இந்த தொடரின் லீக் சுற்றுகள் முடிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து ஆகிய நான்கு அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றன. இதில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி நியூசிலாந்து அணியும், பாகிஸ்தான் அணியை வீழ்த்திய ஆஸ்திரேலிய அணியும் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.
நியூசிலாந்து - ஆஸ்திரேலியா இடையேயான இறுதி போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ள இரு அணிகளுமே இதுவரை டி.20 உலகக்கோப்பையை வெல்லாததால், இந்த போட்டிக்காக ஒட்டுமொத்த ரசிகர்களும் இந்த போட்டிக்காக மிகுந்த ஆவலுடன் காத்துள்ளனர்.
இதில் பெரும்பாலான ரசிகர்கள் நியூசிலாந்து அணியே வெல்ல வேண்டும் என்ற விருப்பத்துடன் காத்திருக்கும் நிலையில், நியூசிலாந்து அணிக்கு மிகப்பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
நியூசிலாந்து அணி இறுதி போட்டி வரை தகுதி பெறுவதற்கு காரணமானவர்களில் முக்கியமானவரான டீவன் கான்வே, காயம் காரணமாக இறுதி போட்டியில் இருந்து விலகியுள்ளார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியின் போது, டெவன் கான்வேவின் கையில் காயம் ஏற்பட்டது. மருத்துவ பரிசோனையின் முடிவில் கான்வேவின் கையில் முறிவு ஏற்பட்டுள்ளது தெரியவந்ததால், அவர் இறுதி போட்டிக்கான நியூசிலாந்து அணியில் இருந்தும், அதன்பிறகு நடைபெற உள்ள இந்திய அணிக்கு எதிரான தொடரில் இருந்தும் விலகியுள்ளதாக நியூசிலாந்து அணி அறிவித்துள்ளது.
நியூசிலாந்து அணியின் மிக முக்கிய வீரர்களில் ஒருவரான கான்வே விலகியுள்ளது நியூசிலாந்து அணிக்கு மிகப்பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. கான்வேவிற்கு பதிலாக டிம் செய்ஃபர்ட் ஆடும் லெவனில் சேர்க்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.