ஒரு கேப்டன் இப்படி சொல்லலாமா - கோலி மீது கபில் தேவ் ஆவேசம்

angry viratkohli newzealand vs india kapildev
By Anupriyamkumaresan Nov 01, 2021 11:57 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in கிரிக்கெட்
Report

நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்த பின்பு விராட் கோலி தெரிவித்த கருத்து மிகவும் பலகீனமானது என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் தெரிவித்துள்ளார்.

அமீரகத்தில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி இதுவரை பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகளிடம் படுதோல்வியடைந்துள்ளது. இதனால் இந்திய அணி மீது கடுமையான விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டு வருகின்றன.

ஒரு கேப்டன் இப்படி சொல்லலாமா - கோலி மீது கபில் தேவ் ஆவேசம் | Newzealand Vs India Virat Kohli Kapildev Angry

நியூசிலாந்து அணிக்கு எதிரான தோல்வி குறித்து பேசிய விராட் கோலி நேர்மையாக சொல்ல வேண்டுமென்றால் இது மிகவும் மோசமான ஆட்டம். எங்களால் டி20 கிரிக்கெட்டை தைரியமாக விளையாட முடியவில்லை என்றார்.

விராட் கோலியின் இந்தக் கருத்துக்கு கபில் தேவ் அதிருப்தி தெரிவித்துள்ளார் "கோலி போன்ற மிகப்பெரிய வீரரிடம் இருந்து வரும் இதுபோன்ற கருத்துகள் மிகவும் பலவீனமானவை.

அணியை வழிநடத்துபவரே இப்படி இருந்தால் மற்ற வீரர்களுக்கு எவ்வாறு நம்பிக்கை பிறக்கும். கோலியிடம் இருந்து இத்தகைய கருத்தை நிச்சயமாக நான் எதிர்பார்க்கவில்லை.

ஒரு கேப்டன் இப்படி சொல்லலாமா - கோலி மீது கபில் தேவ் ஆவேசம் | Newzealand Vs India Virat Kohli Kapildev Angry

அவர் அப்படியொரு வீரரும் கிடையாது என்பதை நான் நன்கு அறிவேன்" என்றார். மேலும் பேசிய அவர் கோலி ஒரு போராளி, இந்த சமயத்தில் அவருக்கு ஏதோ அழுத்தம் இருக்கலாம்.

ஆனாலும் ஒரு கேப்டன் இப்படி பேசியிருக்க கூடாது. இது ஒட்டுமொத்த அணியின் மன வலிமையை குலைக்கும் என்றார்.