Friday, Jul 18, 2025

முகமது சிராஜிற்கு இடம் இல்லை - டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார் ரஹானே: ரசிகர்கள் உற்சாகம்

rahane bating ind vs nz
By Anupriyamkumaresan 4 years ago
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in கிரிக்கெட்
Report

 நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்றுள்ள இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

இந்தியா வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் மூன்று டி.20 போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இதில் முதலில் நடைபெற்ற டி.20 தொடரை 3-0 என்ற கணக்கில் இந்திய அணி முழுமையாக கைப்பற்றியுள்ள நிலையில், இரு அணிகள் இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இன்று துவங்குகிறது.

முகமது சிராஜிற்கு இடம் இல்லை - டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார் ரஹானே: ரசிகர்கள் உற்சாகம் | Newzealand Vs India Toss Win India Chose Bating

கான்பூரில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள இந்த போட்டிக்கான இந்திய அணியின் கேப்டனான ரஹானே முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். இந்த போட்டிக்கான இந்திய அணியில் ஸ்ரேயஸ் ஐயர் அறிமுக வீரராக சேர்க்கப்பட்டுள்ளார்.

அதே போல் அக்‌ஷர் பட்டேல், ரவிச்சந்திர அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகிய மூன்று சுழற்பந்து வீச்சாளர்களும் இந்த போட்டிக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ளனர்.

வேகப்பந்து வீச்சாளர்களாக இஷாந்த் சர்மா மற்றும் உமேஷ் யாதவ் இடம்பெற்றுள்ளனர். அதே போல் இந்த போட்டிக்கான நியூசிலாந்து அணியில் வழக்கமான வீரர்களுடன், அஜாஸ் பட்டேல், வில்லியம் சோமர்வில்லே மற்றும் ரச்சீன் ரவீந்திரா போன்ற வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.